பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


10. நக உளி என்றால் என்ன?
காடியுள்ள எஃகுக் கருவி. மடிந்த எலும்பை நீக்கப் பயன்படுவது.

11. பீர்கத்தி என்றால் என்ன?
முக்கோண அலகுள்ள கத்தி. கண் அறுவையில் பயன்படுவது.

12. போஸ்மன் செருகி என்றால் என்ன?
கருப்பைக்கு உள்ளே செலுத்தும் குழல். தடையில்லாமல் நீர் வடிய இதில் காடி வெட்டப்பட்டிருக்கும்.

13. செருகி என்றால் என்ன?
நீர்மம் செல்வதற்காகப் பயன்படும் கருவி. மூக்குச் செருகி என்றால் என்ள? நீர்ம உணவு செலுத்த இது பயன்படுவது. இது மூக்கு வழியாகத் தொண்டைக்குச் சென்று பின் இரைப்பையை அடையும்.

15. பிடிப்பிகள் என்பவை யாவை?
குழாய்களை இறுக்க அல்லது ஓர் உறுப்பில் பிடிப்பை ஏற்படுத்தப் பயன்படும் கருவிகள்.

16. வாயடைப்பு என்றால் என்ன?
வாயைத் திறந்திருக்குமாறு செய்யும் கருவி. எ-டு. டாயன் வாயடைப்பு.

17. இரைப்பை நோக்கி என்றால் என்ன?
இரைப்பைக் குழாயை உற்று நோக்கும் கருவி.

18. கெய்கர்-முல்லர் எண்ணி என்றால் என்ன?
கதிரியக்கத்தைப் பதிவு செய்து அதைக் கண்டறியுங் கருவி.

19. உள்நோக்கி என்றால் என்ன?
ஓர் உட்குழிவான உறுப்பின் உட்புறத்தை ஆராய உதவும் கருவி.

20. இகின்சன் பீச்சுங்குழல் என்றால் என்ன?

பொதுவான ரப்பராலான பீச்சுக்குழல். இரு குழாய்கள் ஒரு குமிழ், திறப்பிகள் ஆகியவை கொண்டது. ஒரு திசையில் மட்டும் நீர் செல்லும். உள்ளுறுப்புகளைக் கழுவப் பயன்படுதல்.