பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49


ஓய்வு உறக்கம். கனவில்லாத உறக்கமில்லை. இதுபற்றி நன்கு ஆராயப்பட்டுள்ளது.

7. ரெம் என்றால் என்ன?
விரைந்த கண்ண சைவு (rapid eye movement) உறக்கத்தில் ஏற்படுவது.

8. கனவு என்றால் என்ன?
பகலில் நுகரும் காட்சிகள் உறக்கத்தில் கனவாக வருபவை.

9. கனவு பற்றிய உளவியல் கருத்து யாது?
ஈடேறா எண்ணங்களே உறக்கத்தில் கனவாக வருகின்றன. கனவு ஒருவர் ஆளுமையைத் தெரிவிப்பது. கனவு அதிகமாக வருமானால் உளக் கோளாறு என்பது பொருள். இதற்கு மருத்துவரை நாடுவது நல்லது.

10. கனவின் நன்மை யாது?
சிக்கல்கள் தீர கனவு உதவும். அறிவியலில் பல கண்டுபிடிப்புகள் கனவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நம் கணக்கு மேதை இராமானுஜன் தம் கணக்குச் சிக்கல்களை எல்லாம் கனவிலேயே தீர்த்துள்ளார். இதற்கு கனவு அவருக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

11. அறிதுயில் என்றால் என்ன?
உறங்குவது போன்ற நிலை. உளநோய் மருத்துவத்தில் பயன்படுவது. இதில் புறக் கருத்தேற்றங்களுக்கு உள்ளம் துலங்கி, மறந்த நினைவுகளை நினைவுகூர உதவும்.

12. மயிர்ச்சிலிர்ப்பு என்றால் என்ன?
தோல்தசை சுருங்குவதால் ஏற்படும் சிலிர்ப்பு.

13. மறிலினை என்றால் என்ன?
இது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, மூளையின் தலையீடு இல்லாமல் நடை பெறுவது. எ-டு. உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல்.

14. இதன் வகைகள் யாவை?
1. இயற்கை மறிவினை. 2. செயற்கை மறிவினை கட்டுப்படுத்திய மறிவினை.

15. கட்டுப்படுத்திய மறிவினை என்றால் என்ன?

கருத்தியைபினால் உண்டாகும் மறிவினை.

ம-4