பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


16. இதை நிறுவியவர் யார்?
உருசிய உடல் நூல் அறிஞர் பாவ்லவ் (1894-1936).

17. பாபின்ஸ்கி மறிவினை என்றால் என்ன?
நீட்டும் உள்ளங்கால் மறிவினை. உள்ளங்காலைத் தட்டக் கால் பெருவிரல் விரிவதற்குப் பதில் மடங்கும். இது குழவிகளில் இயல்பாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இயல்புநிலை நீங்கும்.

18. பெயின்பிரிட்ஜ் மறிவினை என்றால் என்ன?
சிரைக் குருதி அதிகம் திரும்புதல். இதனால் இதய வீதம் அதிகமாகும். திரிநரம்புத் துடிப்புத் தடைபடுவதால் இது ஏற்படுகிறது.

10. இதயம்
1. இதய அமைப்பு

1. இதயம் என்றால் என்ன?
முழுக்க முழுக்கத் தசையால் ஆன உறுப்பு. மார்பில் நுரையீரல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. குருதியை உடல் முழுதும் செலுத்தி மீண்டும் பெறுவது. இதற்கு ஓய்வே இல்லை.

2. தசை இயக்க இதயம் என்றால் என்ன?
நேரிடையாகத் தசைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் இதயம். எல்லா முதுகெலும்பு விலங்குகளுக்கும் உண்டு.

3. இதயத்தின் எடை என்ன? வடிவம் என்ன?
சுமார் 300 கிராம். தாமரை மொட்டு வடிவம்.

4. இதயத்தசையின் பண்புகள் யாவை?
1. சந்தம்
2. தூண்டுதிறன்
3. சுருங்குதிறன்

4. கடத்தும் திறன்.