பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


2. குருதி இழப்பு தடுக்கப்படுகிறது. உயிருக்கு ஊறு ஏற்படுவதில்லை.
3. இஃது உடலுக்கு இயற்கை அளிக்கும் பாதுகாப்பு.

34. குருதி வகைகள் யாவை?

A, B, AB, O என்னும் நான்கு வகைகள்.

35. இவ்வாறு பிரிக்கலாம் என்னும் கருத்தைக் கூறியவர் யார்?

1900இல் லேண்ட் ஸ்டெயினர்.

36. இவ்வகைகளில் எது சிறந்தது? ஏன்?

O வகை. ஏனைய மூன்று வகையுள்ளவருக்கும் இதைச்செலுத்தலாம்.

37. அனைத்துத்தருநர் என்றால் என்ன?

O வகைக் குருதியில் எதிர்ப்பிகள் இல்லாததால், அது ஏனைய மூவகைக் குருதியோடும் சேரும். ஆகவே, இக் குருதியுள்ளவர் அனைவருக்கும் குருதிக் கொடை அளிக்கலாம்.

38. எவ்விரு அடிப்படைகளில் குருதி வகைப்படுத்தப்படுகிறது?

எதிர்ப்பிகள் அடிப்படையிலும், தெளிநீரிலுள்ள எதிர்ப்புப் பொருள்கள் அடிப்படையிலும் குருதி வகைப் படுத்தப்படுகிறது.

39. குருதிவங்கியின் பயன் யாது?

இதில் சேமித்து வைக்கப்பட்ட குருதி விபத்து அல்லது அறுவையின் பொழுது அளிக்கப்படும்.

40. அளைத்துக்குருதி மாற்று என்றால் என்ன?

குருதிச் சேமிப்பில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட அடர்பொருள் நீங்கிய ஈமோகுளோபினிலிருந்து உருவாக்கப்பட்டது. இதற்கு ஐஐஎச் வினைப் பொருள் என்று பெயர்.

41. இது யாரால் உருவாக்கப்பட்டது?

- 1992இல் பம்பாய் மருத்துவ அறிவியலாரால் உருவாக்கப்பட்டது. 27 - 72 மணி நேரத்திற்குள் ஏற்படும் நெருக்கடி நிலை நோயாளிகளுக்கு இது சிறந்த மாற்று.

42. குருதி உறைவைத் தடுக்கும் பொருள் எது?

கெப்பாரின்.