55
43. குருதி ஓட்டத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
வில்லியம் ஹார்வி என்னும் ஆங்கில மருத்துவர் 1628இல் கண்டுபிடித்தார்.
44. குருதி ஓட்டத்தின் இரு வகைகள் யாவை?
1. பொதுக் குருதியோட்டம்
2. நுரையீரல் குருதியோட்டம்
45. கணிமத்தின் (பிளாஸ்மா) வேலை என்ன?
இது மஞ்சள் நிறமுள்ளது. குருதியணுக்களைக் கொண்டு செல்வது. இதில் தெளிநீர் (சீரம்) உள்ளது.
46. தெளிநீரியல் (செராலஜி) என்றால் என்ன?
எதிர்ப்பி, எதிர்ப்புப் பொருள் ஆகியவற்றில் வினைகளை ஆராயுந் துறை. இப்பொருள்கள் தெளிநீரில் உள்ளன.
47. தெளிநீர் (சீரம்) என்பது யாது? அதன் வேலை என்ன?
குருதியிலிருந்து வெளிவரும் மஞ்சள் நிற நீர்மம் ஊட்டச்சத்தையும் எதிர்ப்புப் பொருள்களையும் எடுத்துச் செல்வது.
48. உயர் குருதியழுத்தம் என்றால் என்ன?
அதிகக் குருதியழுத்தம். இயல்பான அளவுக்கு மேலிருப்பது.
49. உயர் குருதியழுத்தத்தால் பாதிக்கப்படும் உறுப்புகள் யாவை?
இதயம், சிறுநீரகங்கள், மூளை, கண்.
50. உயர் குருதியழுத்தத்தால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
இதயம் சரியாகச் சுருங்கி விரியாது. இதயத்தளர்ச்சி ஏற்படும்.
51. உயர் குருதியழுத்தத்தால் சிறுநீரகங்களில் ஏற்படும் பாதிப்பென்ன?
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யா.
52. உயர் குருதியழுத்தத்தால் மூளையில் ஏற்படும் சிக்கல் என்ன?
பக்கவாதம் ஏற்படும். குருதிக்கசிவு அதிகமிருந்தால் இறப்பு நிகழும்.