பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


53. உயர்குருதியழுத்தத்தால் கண்ணில் ஏற்படும் சிக்கல் யாது?

கண்பார்வை மங்கும்; பார்வை இழப்பும் ஏற்படும்.

54. கீழ்க்குருதியழுத்தம் என்றால் என்ன?

இயல்பான நிலைக்கு கீழுள்ள குருதியழுத்தம். இது வேண்டப்படாதது.

55. ஆடிஸ் எண்ணிக்கை என்றால் என்ன?

24 மணிநேரத்தில் சிறுநீரிலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை.

56. நல்ல உடல்நலம் உள்ளவர்களிடம் சிவப்புக் குருதியணுக்கள் எத்தனை இருக்கும்?

ஒரு கன மில்லிமீட்டருக்கு 4-5 மில்லியன்.

57. வெள்ளணுக்களின் எண்ணிக்கை எத்தனை?

ஒரு கனமில்லிமீட்டருக்கு 7000 - 10000.

58. குருதிச்சர்க்கரையின் அளவென்ன?

இயல்பாக உள்ள அளவு 0.08 0.12 % அல்லது 80-120 மிகி (100 மில்லிகிராம் குருதி), சர்க்கரை நோய் உள்ளவருக்கு இது 180 மிகிக்கு மேலிருக்கும்.

59. குருதியின் வேலைகள் யாவை?

1. உயிர்வளியையும் ஊட்டப்பொருள்களையும் திசுவிற்கு அளித்தல்.
2. கழிவுகளை கழிவு உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது.
3. சுரப்பிகளுக்கு வேண்டிய சுரப்பிப் பொருள்களைக் கொண்டு செல்கிறது.
4. வளர் தூண்டிகளை உடலின் பல பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது.
5. இதிலுள்ள வெள்ளணுக்கள் நோய் நுண்ணங்களைக் கொல்கின்றன?
6. உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைக்கிறது.

60. குருதிப்படலம் என்றால் என்ன?

குருதியின் இயைபை ஆராய, அதைக் கண்ணாடிவில்லையில படலமாக எடுத்துச் சாயமேற்றி நுண்ணோக்கியில் பார்த்தல்.