பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58


1. இதய மேலறை இடைச்சுவர்த்துளை அடைப்பு. 2. இதயக்கீழறை இடைச்சுவர்த்துளை அடைப்பு. 3. இதயத்திறப்பிகளைச் சரிசெய்தல்.

70. மூடிய இதய அறுவை என்றால் என்ன?

இதில் மயக்க மருந்து கொடுக்கப்படும். இடது மார்பு கீறப்பட்டுத் திறக்கப்படும். நுரையீரல் ஒதுக்கப்படும். இறுதியாக இதயவெளி உறையைத் திறந்து, இதயம் எட்டப்படும்.

71. இவ்வறுவையின் பொழுது செய்யப்படுபவை யாவை?

1. ஈரிதழ்த்திறப்பிச் சுருக்கம் விரிவாக்கப்படுதல். 2. பெருந்தமனியின் துளையை அடைத்தல். 3. இதய வெளியுறையை நீக்குதல். 4. நுரையீரல் தமனியைச் சுருக்குதல். 5. இதயமுடுக்கியைப் பொருத்துதல்.

72. அமெரிக்க அறுவை மருத்துவர்கள் ஹெலன் புரூக் டசிக், ஆல்பிரட் பிலாலக் ஆகிய இருவரும் செய்த அருஞ்செயல் யாது?

இவர்கள் உடலில் நீல நிறத்துடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை முறையைக் கண்டுபிடித்தனர்.

73. மாற்று இதய அறுவை முதன்முதலில் எவற்றில் செய்யப் பட்டது, செய்தது யார்?

1905இல் காரல், குதாரி ஆகிய இருவரும் ஆய்வுநோக்கில் விலங்குகளில் இந்த அறுவையை மேற்கொண்டனர். ஒரு விலங்கின் பழுதடைந்த இதயத்தை நீக்கிவிட்டு மற்றொரு விலங்கின் இதயத்தை அதில் பொருத்தினர்.

74. 1960இல் நடந்த மாற்று இதய அறுவை ஆய்வுகள் யாவை?

இயோ, இயார்வே ஆகிய இரு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் 8 விலங்குகளுக்கு மாற்று இதயம் பொருத்தினர். இவை 21 நாட்கள் உயிர்வாழ்ந்தன.

75. முதன்முதலில் மாற்றுவழி அறுவையைச் செய்தவர் யார்?

1960இல் அர்ஜண்டைனாவைச் சார்ந்த ஆண்டு ரேனே ஃபவலோரா என்பார் இதைச் செய்தார்.

76. கிறிஸ்டியன் பர்னார்டு செய்த அருஞ்செயல் யாது?