பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60


பெருந்தமனி இடுக்கி அகற்றப்படும். இப்பொழுது குருதி ஓட்டம் துவங்கும். இதயமும் துடிக்கும். மாற்று இதயம் பெற்றவர்கள் இதய ஊக்கி மருந்தைத் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். சைக்ளோஸ்போரின் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

82. மாற்று இதயம் பொருத்துவதின் நிலை என்ன?

இதுவரை மாற்று அறுவை செய்து கொண்டவர்களில் 80% பேர் 7 ஆண்டுகளுக்கும் 75% பேர் 2 ஆண்டுகளுக்கும் உயிர் வாழ்ந்துள்ளனர்.

83. எஞ்சிய சதவீதத்தினர் உயிர் இழப்பதற்குரிய காரணிகள் யாவை?

1. இதயம் மறுக்கப்படுதல்.
2. இதயத்துடிப்பு மாறுபாடு.
3. மூளைப்பாதிப்பு.
4. நோய்த்தொற்று.

84. மாற்றுஇதயம் பொருத்தப்படுவதற்குத் தகுதி உடையவர் யார்?

1. இதயக்கீழறை அளவுக்கு அதிகமாக விரிவடைந்த நோயாளிகள்.
2. இதயத்திறப்பிகள் கோளாறுகளுடன் இதயத்தசை நோயுள்ளவர்.
3. காரணம் அறிய இயலாத நோயால் உடன்இறக்கும் வாய்ப்புள்ளோர்.

85. இவர்களுக்கு நடத்தப்படும் ஆய்வுகள் யாவை?

1. உயிர்வேதிஇயல் ஆய்வு.
2. நுண்ணுயிரி ஆய்வு.
3. நோய் எதிர்ப்பாற்றல் ஆய்வு.
4. குருதி ஆய்வுகள்.
5. தசை ஆய்வுகள்.
6. இதயத்தமனிச் சாய வரைபடம்.

86. மாற்று இதயம் யாரிடமிருந்து பெறப்படுகிறது?

மூளை மட்டும் இறப்புக்குள்ளான ஒருவரிடமிருந்து