இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
- இதுவரை இரண்டு ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர்.
92. செற்கை இதயத்தால பயன்பெறக் கூடியவர் யாவர்?
- 1. மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
- 2. இதய இடைச்சுவரில் துளை பெரிதான நிலையில் உள்ளவர்.
- 3. இதயத்திறப்பிகள் பழுதடைந்தவர்கள்.
- 4. இதயக் கீழறைகள் இரண்டும் பாதிக்கப்பட்டவர்கள்.
- 5. நீலநிறக் குழந்தைகள்.
- மாற்று இதயம் செயல் இழக்கும்பொழுது, செயற்கை
இதயம் பயன்படுத்தப்படலாம்.
93. செயற்கை இதயத்தின் பயன்கள் யாவை?
- 1. இயற்கை இதயங்கள் அரிதாகவே கிடைக்கும். செயற்கை இதயத்தை வேண்டிய அளவுக்கு உற்பத்தி செய்யலாம்.
- 2. செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர்கள் சைக்ளோப்போரின் உட்கொள்ளத் தேவையில்லை.
- 3. அவசர அறுவைக்கு இதைப் பொருத்தலாம்.
- 4. அனைத்து வயதினரும் இதைப் பயன்படுத்தலாம்.
94. இதை ஏழைகள் பயன்படுத்த முடியுமா?
- முடியாது. விலை அதிகம்.
95. புதிய ஜார்விக் 7 செயற்கை இதயம் என்பது யாது?
- 1989இல் ஜெர்சன் ரோசன்பர்க் எனும் அமெரிக்க உடலியல் பொறியாளர் புனைந்த செயற்கை இதயமாகும். இது வடிவமைப்பிலும் செயல்பாட்டிலும் பழைய ஜார்விக்-7லிருந்து வேறுபட்டது. இது எலுமிச்சை அளவில் உள்ளது.
5. இதயக்கருவிகள்
96. இதய வரைவு என்றால் என்ன?
- இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் படம்.