இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
63
97. இதயவரைவி என்றால் என்ன?
- இதய அலை இயக்கத்தை வரைபடமாகப் பதிவு செய்யும் கருவி.
98. இதய மின் வரையம் என்றால் என்ன?
- இதயத்தசைகள் சுருங்கும்பொழுது மின்வேறுபாடுகளின் ஒளிப்படப் பதிவு. இதயநிலையைக் கண்டறிய எடுக்கப்படுவது (ECG)
99. மூளை மின்வரையம் என்றால் என்ன?
- பெருமூளைப் புறணியின் நரம்பணுக்களால் உண்டாக்கப்படும் மின்னழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பதிவு செய்தல் (EEG)
100. இதயமுடுக்கி என்றால் என்ன?
- இதயத்துடிப்பின் அளவைச் சீராக்க மனித உடலில் பொருத்தப்படும் சிறிய மின்னணுக்கருவி.
101. இதய மின்னலை வரைபடத்தின் மூலம் நாம் அறிந்து கொள்பவை யாவை?
- 1. இதயத்துடிப்பு எண்ணிக்கை.
- 2. இதயத்துடிப்புச் சந்தம்.
- 3. கடத்தும் திறன்.
- 4. மாரடைப்பு.
- 5. இதயச் செயலமைப்பு.
- 6. இதயவீக்கம்.
- 7. மருந்துகளின் நச்சுத்தன்மை.
102. இதய நுரையீரல் எந்திரத்தை யார் எப்பொழுது கண்டுபிடித்தார்?
- 1953இல் அமெரிக்க அறுவை மருத்துவர் ஜான் கிப்பன் இதைப் புனைந்தார். திறப்பு இதய அறுவை முறையை அறிமுகப்படுத்தியவர் இவரே.
103. குழந்தைகளுக்குத் திறப்பு இதய அறுவை எப்பொழுது நாடறிந்ததாயிற்று?
- 1972க்குப் பின் நாடறிந்ததாயிற்று.