இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
64
6. இதய நோய்கள்
104. இதய நோய் குறித்து அறிவதற்குரிய இரு அணுகு முறைகள் யாவை?
- 1. நோயாளி பற்றிய வரலாறு
- 2. நோய்க்குறிகள்
- 1. நோயாளி பற்றிய வரலாறு
105. இதயநோய்க்குறிகள் யாவை?
- 1. மார்புவலி
- 2. மூச்சுமுட்டல்
- 3. நெஞ்சப் படபடப்பு
- 4. உடல் சோர்வு
- 5. மயக்கமுறுதல்
- 1. மார்புவலி
106. இதய ஆய்வுகள் யாவை?
- 1. இதய மின்னலை வரைபடம்
- 2. இதய ஊடுகதிர்ப் படம்
- 3. இதய எதிரொலி ஆய்வு
- 4. இதய காந்த அதிர்வலைப்படம்
- 5. இதய உட்புகு ஆய்வு
- 6. கதிரியக்க ஆய்வுகள்
- 1. இதய மின்னலை வரைபடம்
107. அதிர்ச்சி என்றால் என்ன?
- இது மனித உடலில் பொதுக் குருதி ஒட்டக் குறைபாடு காரணமாக ஏற்படும் நோயியம் ஆகும்.
108. இந்த அதிர்ச்சியின் வகைகள் யாவை?
- 1. குருதியோட்டக் குறை அதிர்ச்சி
- 2. இதயத் திறனிழப்பு அழற்சி
- 3. நச்சுக்குருதி அதிர்ச்சி
- 4. அதி ஒவ்வாமை அதிர்ச்சி
- 1. குருதியோட்டக் குறை அதிர்ச்சி
109. இந்த அதிர்ச்சியின் அறிகுறிகள் யாவை?
- 1. உடல் வெப்பக் குறைவு.
- 2. இதயம் படபடக்கும். நாடித்துடிப்பு மிகும்.
- 3. பெருமூச்சு வாங்கும்.
- 4. குருதியழுத்தம் குறையும்.
- 5. நோயாளியால் நடக்க இயலாது. கிறுகிறுப்பு
- 1. உடல் வெப்பக் குறைவு.