பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


குருதிக்குழாய் சிறிது பழுது பட்டாலும் குருதி மிகுதியாக வெளியேறும். இது மரபு வழிச் சார்ந்தது. ஆண்களிடம் காணப்படும் பால் தொடர்பு நோய்.

120. குருதி நீரிழிவு என்றால் என்ன?

சிறுநீரில் குருதி வெளிப்படல்.

121. குருதிக் குழாய் அடைப்பின் தீமைகள் யாவை?

இந்த அடைப்பு மூளைக் குருதிக் குழாயில் ஏற்பட்டால் பக்க வாதம் உண்டாகும். கைகளின் குருதிக் குழாய் ஏற்பட்டால் அழுகல் நோய் உண்டாகும்.

122. இதயத்தளர்ச்சி (heart failure) என்றால் என்ன?

உடல் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் போதிய குருதியை இதயம் அளிக்காத நிலை. இது இதய இட, வலக் கீழறைகளைப் பாதிக்கும்.

123. இதயத்தளர்ச்சியின் இரு வகைகள் யாவை?

1. கடும் இதயத் தளர்ச்சி
2. நாட்பட்ட இதயத் தளர்ச்சி

124. இதய வலிக்குக் (angina) காரணம் என்ன?

இதயத் திசுக்களுக்குக் குருதி கொண்டு செல்லும் இதயத் தமனிகளில் கொழுப்பு படிந்து அவற்றைச் சுருங்கச் செய்யாது.

125. இதய வலிக்கு முதல்உதவி என்ன?

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் நைட்ரேட் மருந்துகள் ஒன்றை உட்கொள்ளச் செய்தல். கிளிசரல் நைட்ரேட்.

126. இதய வலிக்குரிய பண்டுவ முறைகள் யாவை?

1. மாற்றுவழி அறுவை
2. இதயத்தமனிச் சீரமைப்பு
3. லேசர் ஒளி அளித்தல்

127. இதய வலியைத் தடுக்கும் முறைகள் யாவை?

1. புகைபிடிக்காதிருத்தல்
2. உடல் எடையை வயதிற்கும் உயரத்திற்கும் தகுந்தவாறு பேணுதல்.
3. உடற்பயிற்சி செய்தல்.