பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68


2. இதயக் கீழறைச் சுவரில் துளை.
3. ஃபேலட்டின் நான்மைக் குறைபாடுகள்.
4. பெருந்தமனி-நுரையீரல் தமனி இணைப்புக்குழாய் திறப்பு.
5. இதயப் பெருந்தமனி இடமாற்றம்.
6. பெருந்தமனி இறுக்கம்.
7. நுரையீரல்தமனிக் குறுக்கம்.
8. மூவிதழ்த்திறப்பி வளர்ச்சியின்மை.

136. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளின் பிறவி இதய நோய் சதவீதம் என்ன?

சுமார் 2% 137.

137. கருவளர்ச்சியின் எந்தக் காலத்தில் இதய வளர்ச்சி தடைப்படுகிறது?

ஐந்தாம் வாரம் தொடங்கி எட்டம் வாரம் வரை உள்ள காலம்.

138. இப்பொழுது இதயத்தின் இயல்பான வளர்ச்சியைத் தடைப்படுத்தும் காரணிகள் யாவை?

1. தொற்றுநோய்கள்
2. மரபணுக்குறைபாடுகள்
3. தாய் உட்கொள்ளும் மருந்துகள்
4. ஊட்டக்குறைவு.
இவை பிறவி இதயநோய்கள் உண்டாகக் காரணிகள் ஆகும்.

139. குருதி வாந்தியின் அறிகுறி என்ன?

குடல்புண் என்பது பொருள்.

140. குறைந்த துடிப்பு என்றால் என்ன?

இயல்புக்கு மாறான குறைந்த நாடித் துடிப்பு. தலை காயமுறும்பொழுதும் இதயத் தடையின் பொழுதும் ஏற்படுவது.

141. குருதிக்கசிவு என்றால் என்ன?

தமனி, சிரை, தந்துகி ஆகிய குழாய்களிலிருந்து இரத்தம்

142. இக்கசிவு எவ்வாறு அமையும்?