பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


5. முக்கிளிசரைடுகள்.

149. இவற்றில் எது மாரடைப்பு நோயை உண்டாக்குகிறது?

குறையடர்த்திக் கொழுப்புக் கொலஸ்டிரால்.

150. கொலஸ்டிரால் குறைவாக உள்ள உணவுப் பொருள்கள் யாவை?

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், மீன்.

151. புகைபிடித்தல் இதயத்தைப் பாதிக்குமா?

கட்டாயம் பாதிக்கும்.

152. சிகரட்புகையில் உள்ள நச்சுப் பொருள்கள் எத்தனை?

சுமார் 4000.

153. அவற்றில் முக்கியமானவை யாவை?

நிகோடின், கரிஓராக்சைடு, அமோனியம், பென்சீன், பினாயில், கிரசால்.

154. இதயநலம் காக்கும் வழிமுறைகள் யாவை?

1. உடல் பருமனைத் தவிர்த்தல்.
2. உணவுமுறையில் போதிய நாட்டம் செலுத்தல்.
3. உடற்பயிற்சி செய்தல்.
4. நாள்தோறும் தவறாது நடத்தல்.
5. மதுவைத் தவிர்த்தல்.
6. நோய்த் தொற்றுகளைத் தவிர்த்தல்.
7. உளநெருக்கடியைத் தவிர்த்தல்
8. மருத்துவ ஆய்வுகளை அவ்வப்பொழுது செய்து மருத்துவர்
அறிவுரையையும் பெறுதல்.

155. உடல்பருமனைக் கண்டறியும் வாய்ப்பாடு என்ன?

உடல்நிலைக்குறி எண் =
உடலின் எடை (கி.கி.)
உடலின் உயரம் (மீட்டரில்)

11. நுண்ணுயிரிகள்

1. நுண்ணுயிரிகள் யாவை?

தங்கள் உடலில் பச்சையம் இல்லாத குச்சிவடிவ உமிரிகளும் நச்சியங்களும் நுண்ணுயிரிகள் ஆகும்.