உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


மற்றொருவருக்குப் பரவுவது. தட்டம்மை, சின்னம்மை முதலியவை சிறுஅளவில் தீங்கு விளைவிக்கக் கூடியது. காலரா, பிளேக் முதலியவை பெருமளவில் தீங்கு தருபவை.


13.தொழிலிடநோய் என்றால் என்ன?

ஒருவர் செய்யும் தொழிலினால் ஏற்படும் நோய். காட்டாகத் துரசிபடல் தொழிலில் ஈடுபடுவோருக்குத் துர்சிநோய் ஏற்படும்.


14.உடன்கொல்லும் நோய் எது?

மாரடைப்பு.


15.கொல்லாது கொல்லும் நோய் எது?

புற்றுநோய்.


16.நோய்களில் பெரும்பான்மை எத்தகைய இயல்புள்ளவை?

மரபணுக் குறைபாடு உள்ளவை. ஆகவே, வழி வழி வருவது. எ-டு சர்க்கரை நோய்.


17.அடிசன் நோய் என்பது யாது?

அண்ணீரகச் சுரப்பிகளின் புறணிச் சுரப்பு குறையும் பொழுது ஏற்படும் குறைநோய்.


18.இதன் அறிகுறிகள் யாவை?

பெருந்தசை நலிவு, குறைந்த குருதியழுத்தம், தோல்கறுப்பாதல், குமட்டல் முதலியவை.


19.இந்நோய் இருந்த ஒர் அரசியல் தலைவர் யார்?

மறைந்த அமெரிக்கச் குடியரசுத்தலைவர் கென்னடிக்கு இந்நோய் இருந்தது.


20.மலேரியா என்றால் என்ன?

ஒரு வெப்ப மண்டல நோய். பிளாஸ்மோடியம் என்னும் நுண்ணுயிரியினால் ஏற்படுவது. அனோபிலஸ் கொசுவினால் பரப்பப்படுவது.


21.இதன் அறிகுறிகள் யாவை?

நடுங்கவைக்கும் குளிர், அதிகக் காய்ச்சல், மிகுவியர்வை, குமட்டல், நீர்வேட்கை, தலைவலி.


22.இதற்குரிய மருந்துகள் யாவை?

1926இல் பிளாஸ்மா கொய்னா கண்டு பிடிக்கப்பட்டது.