பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


இதற்குப்பின் அட்டாபிரைன், கொய்னாகிரைன், குளோரோகொய்னா, பிரைமாகொய்னா முதலிய மருந்துகள் வந்துள்ளன.


23.மலேரியாவை வென்ற வீரர் யார்?

சர் ரெனால்டு ராஸ் (1857-1952) என்பார் 1897இல் அனோபிலஸ் கொசுதான் மலேரியாவைப் பரப்புகிறது எனக் கண்டார். இதற்காக இவருக்கு 1902 இல் நோபல் பரிசு கிடைத்தது. மருத்துவத் துறைக்காக இரண்டாம் நோபல் பரிசு வாங்கியவர் இவரே.


24.மஞ்சள் காய்ச்சல் என்றால் என்ன?

நச்சுயிரியால் உண்டாகும் நோய். கொசுக்களினால் பரப்பப்படுவது. குடல் குருதிக் கசிவு, மஞ்சள் காமாலை, காய்ச்சல் முதலியவை அறிகுறிகள்.


25. புற்று நோய் என்பது யாது?

வரையறுத்துக் கூறுமிடத்து இது நோயன்று. நம் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் உள்ள இயல்பான உயிரணுக்கள் கட்டுப்பாடற்று வளர்வதாகும்.


26.புற்று நோய் உடலின் எப்பகுதியில் உண்டாகிறது?

வாய், தொண்டை, குடல், சுரப்பி முதலிய உறுப்புகளில் உண்டாகிறது.


27.புற்று நோய் எதனால் உண்டாக்கப்படுகிறது?

நச்சியத்தால் உண்டாக்கப்படுகிறது.


28.புற்று நோயைத் தூண்டும் பொருள் யாது?

கார்சினோஜன்.


29.புற்று நோய்க்கு நிலையான மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளதா?

இல்லை. கதிர்வீச்சப் பண்டுவம் மட்டுமே உள்ளது.


30. சென்னையில் புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?

அடையாற்றில் உள்ளது.


31.தொண்டைப் புற்று நோயால் இறந்த தமிழகத் தலைவர் யார்?

அறிஞர் அண்ணா.


32.வருங்காலத்தில் எப்பண்டுவம் இதைப் போக்கலாம்?