பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


மரபணுப்பண்டுவம்.

33. கொழுப்புப் பன்மச் சர்க்கரைடு என்றால் என்ன?

புற்று நோயைத் தடுக்கும் புதிய பொருள்.

34. இது எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது?

இது ஒரு நச்சு. குச்சிவடிவ உயிர்கள், தாவரங்கள் ஆகியவற்றின் கண்ணறைச் சுவர்களில் காணப்படுகிறது. இது புற்று நோய் அணுக்களை அழிக்க வல்லது. ஜப்பான் அறிவியலார் கோதுமையைத் தாக்கும் குச்சிவடிவ உயிரியிலிருந்து இதைப் பிரித்துள்ளனர்.(1994).

35. தொழு நோய் என்றால் என்ன?

மைக்ரோபேக்டிரியம் லெப்ரோ என்னும் நுண்ணுயிரியால் ஏற்படும் முற்றிய தோல் நோய்.

36. இதன் வகைகள் யாவை?

1. குழாய் வகை - தோலில் புள்ளிகளும், தடிப்புகளும் ஏற்படும்.
2. மரமரப்புவகை - நரம்புகளைத் தாக்குவது. இதனால் பாதிக்கப்பட்ட தோல் பகுதிகளில் உணர்ச்சி இராது. இது ஒழிக்கக் கூடிய நோயே.

37. மஞ்சட்காமாலை என்றால் என்ன?

இது ஒரு நோய்க்குறிப் போக்கு. குருதியிலும் திசு நீர்மங்களிலும் பித்தநீர் நிறமிகள் அதிகமாகும். இதனால் மஞ்சள் நிறம் கண், தோல் முதலிய பகுதிகளில் தென்படும். செவ்வணுக்கள் மிகுதியாக அழிக்கப்படுவதாலோ பித்தநீர்க் கற்களால் அடைப்பு ஏற்படுவதாலோ இந்நோய் உண்டாகிறது. ஆங்கில மருத்துவத்தை விட நாட்டு மருத்துவமே மேல்.

38. ரிக்கட்சியால் காய்ச்சல் என்றால் என்ன?

அதிகம் தொற்றக் கூடிய நோய். ரிக்கட்சியால் புரோவசெகி என்னும் நுண்ணுயிரியினால் ஏற்படுவது. சல்பனாமைடு மருந்துகள் பயன்தரும். பேன்களும், தெள்ளுப் பூச்சிகளும் இது பரவக் காரணம்.

39. இதன் அறிகுறிகள் யாவை?