பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81


தடிப்பு, தாளாத் தலைவலி முதலியவை அறிகுறிகள்.

40. முறைக்காய்ச்சல் என்றால் என்ன?

கொடிய தொற்றுநோய். நல்வாழ்வு குறைவாகவுள்ள இடங்களில் ஏற்படுவது. சால்மோனெலா டைப்பி என்னும் நுண்ணுயிரியினால் உணவு மூலம் ஏற்படுவது. அடைகாலம் 14 நாட்கள் ரோஜா நிறத்தடிப்பு முதுகிலும் வயிற்றிலும் முதல்வார முடிவில் ஏற்படும்.

41. கக்குவான் என்றால் என்ன?

குழந்தைகளுக்குரிய தொற்றுநோய். இருமலும் மூச்சிழுப்பும் அதிகமிருக்கும். இதற்குத் தடுப்பூசி உண்டு.

42. மேக நோய் என்றால் என்ன?

தொற்றக்கூடிய பால்நோய். ஒரு வகை நுண்ணுயிரியினால் உண்டாவது.

43. பிரைட் நோய் என்பது யாது?

சிறு நீரக அழற்சி.

44. உறக்க நோய் என்றால் என்ன?

ஆப்பிரிக்க நோய். டிரிப்பனசோம்கள் மூளையில் தொற்றி உறக்கத்தை உண்டாக்குதல்.

45. தசைநோய் என்றால் என்ன?

எலும்புக் கூட்டுத் தசையில் ஏற்படும் சீர்குலைவு.

46. பிளவை என்றால் என்ன?

கரிய நிறமுள்ள ஸ்டேப்பிலோ காக்கஸ் என்னும் நுண்ணுயிரியினால் ஏற்படும் சுழற்சி. தோலிலும் தோலுக்குக் கீழும் இருக்கும். அழுகலும், நீர் வடிதலும் இதற்குரியவை. திறப்பு இல்லாததால் பல முனைகளிலிருந்து வடிதல் ஏற்படும். பெனிசிலின் கண்டு பிடித்த பின் இது அறவே ஒழிந்த நோய்.

47. சளிக்காய்ச்சல் என்றால் என்ன?

நச்சியத்தினால் உண்டாகும் நோய். மூச்சுவழியின் மென்படலத்தைப் பாதிப்பது, கடுமையாகத் தாக்குவது. மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இருக்கும்.

48. ஈளை நோய் என்றால் என்ன?

மூச்சுத் திணறலோடு மூச்சு விடுதல். மூச்சு வலிப்பினால்
ம.6.