உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


வெளி மூக்கிலும் தொப்பை இருக்கும்.

49. கீல்வாதக் காய்ச்சல் என்றால் என்ன?

கொடிய நோய். இதய வீக்கம், கீல்வாதம், காய்ச்சல் இதன் அறிகுறிகள்.

50. கீல் மூட்டழற்சி என்றால் என்ன?

நாட்டப்பட்ட மூட்டு வீக்கம்.

51. படர் தாமரை என்றால் என்ன?

பூஞ்சையால் ஏற்படும் தோல் நோய்.

52. சொறிசிரங்கு என்றால் என்ன?

அரிப்புண்ணியால் ஏற்படுவது. அதிகம் தொற்றக் கூடிய தோல்நோய். கந்தகக் களிம்பு தடவலாம். ஊசியும் போட்டுக் கொள்ளலாம்

53. நீரிழிவு என்றால் என்ன?

சர்க்கரை நோய். மாப்பொருள் வளர்சிதை மாற்றக் குறைவினால் ஏற்படும் மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, ஊசி போட்டுக் கொள்ளுதல் ஆகிய இரண்டின் மூலமே கட்டுப்படுத்தலாம்.

54. இதன் வகைகள் யாவை?

1. தீவிய நீரிழிவு நோய்.
2. அல்தீவிய நீரிழிவு நோய்.

55. எயிட்ஸ் நோய் என்றால் என்ன?

ஈட்டு எதிர்ப்பாற்றல் குறை நோயியம். (acquired immune deficiency syndrome) நச்சியத்தினால் விலைமகள் மூலம் பரவுவது. குழந்தைகளையும் பற்றுவது.

56. இந்நோய் எப்பொழுது எங்குக் கண்டறியப்பட்டது?

அமெரிக்காவில் 1981இல் கண்டறியப்பட்டது. உலகெங்கும் பரவியுள்ளது. குறிப்பாகச் சமூகத்தில் கீழ்த்தட்டில் உள்ளவர்களிடம் அதிகம் காணப்படுவது.

57. இதன் குறிப்பிடத்தக்க இயல்பு யாது?

ஓர் அழிவுநோய். வெள்ளணுக்களை அழிப்பதால் தடுப்பாற்றல் உண்டாவதற்கு வழியில்லை.

58. எயிட்ஸ் நோய்க்கு நிலையான மருந்து உள்ளதா?

இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்பொழுது