பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84



2. அழற்சி

66. கண்ணழற்சி என்றால் என்ன?

கண் வீங்கிய நிலை.

67. வாயழற்சி என்றால் என்ன?

வாய் வீக்கம். ரிபோபிளேவின் என்னும் வைட்டமின் குறைவினால் வாய் ஓரங்களில் புண் ஏற்படுதல்.

68. சளியழற்சி என்றால் என்ன?

தொண்டைச் சுரப்பிச் (தைராய்டு) சுரப்பு குறைவால் உண்டாகும் நோய்.

69. இதன் அறிகுறிகள் யாவை?

மயிர் நீங்கல், தோல் வறட்சி, தோல் தடிப்பு, எடை மிகுதல், ஊக்கச்செயல் குறைவு, வளர்சிதை மாற்றக்குறைவு.

70. செவியழற்சி என்றால் என்ன?

செவி வீக்கம் ஆகும்.

71. செவி ஒழுக்கு என்றால் என்ன?

செவியிலிருந்து சீழ் வடிதல்.

72. சிலிகோ அழற்சி என்றால் என்ன?

சிலிகா தூசியை உட்கொள்வதால் ஏற்படும் நோய். பொதுவாகக் சுரங்கக் தொழிலாளர்களிடம் காணப்படும். நாட்பட்ட நுரையீரல் நோய்.

73. நரம்பழற்சி என்றால் என்ன?

இது ஒரு நோய் நிலைமை. உணர் நரம்புகளை நச்சியம் தாக்குவதால் ஏற்படுவது. நரம்புகள் நெடுகக் கொடிய வலியும் கொப்புளங்களும் உண்டாகும்.

74. மூளை - வட அழற்சி என்றால் என்ன?

மூளையும் தண்டுவடமும் வீங்குதல்.

75. கெர்னிக் குறி என்றால் என்ன?

முப்படல அழற்சியின் அறிகுறி. முழங்காலை நீட்ட இயலாது.

76. குடல் வால் அழற்சி என்றால் என்ன?

குடல் வால் நோயுற்று வீங்குதல். அதிக வலி இருக்கும்