பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


பொழுது இதை அறுத்து நீக்குவதே நல்லது. இது ஒரு பயனற்ற உறுப்பு.

77. தொண்டை அழற்சி என்றால் என்ன?

தொண்டைச் சளிப் படலம் வீங்குதல்.

3. வலி

78. வலி என்றால் என்ன?

திறந்த நரம்பு முளைகளில் உள்துண்டல். புறத்துண்டல் மூலம் பெறப்படும் குறைவு உணர்வு. இது ஒரு நோயின் அறிகுறியே.

79. தலைவலி என்பது யாது?

தலையில் ஏற்படும் நோவு. இது பல நோய்களின் அறிகுறி. இது ஒற்றைத்தலைவலி, நெருக்கடித் தலைவலி எனப் பலவகை.

80. குடல் வலி என்றால் என்ன?

தடையினால் உட்குழிவான உள்ளுறுப்பு தசைத் துடிப்பை உண்டாக்குவதால் ஏற்படும் கடும் வலி.

81. இதன் வகைகள் யாவை?

1. பித்தநீர்ப்பை வலி - பித்த நீர்க்கல்
2. குடல் வலி - கடும் வயிற்றுவலி
3. மலக்குடல் வலி - சிறு நீரகக் கல்
4. கருப்பை வலி - அதன் பொருள்களை வெளியேற்ற முயலும்பொழுது ஏற்படுதல்.

82. நரம்பு வலி என்றால் என்ன?

ஒரு நரம்பு பகிர்வில் ஏற்படும் நோவு. எ-டு முந்நரம்பு வலி.

83. வலிப்பு என்றால் என்ன?

மாறி மாறி தசை சுருங்கலும் விரிதலும். மூளைச் செயல் கோளாறினால் நடைபெறுவது.

84. நரம்பு வலிப்பு என்றால் என்ன?

உளக்கோளாறு நோயாளிக்குத் தான் செய்வது என்னவென்றே தெரியாது. நெருக்கடியிலுருந்து