பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


வீக்கத்தினால் குழாயில் சீழ் சேர்தல்.

94. நகச்சுற்று என்றால் என்ன?

நகத்தைச் சுற்றி விரல் முனை வீங்கிச் சீழ் உண்டாதல்,

5. காயங்களும் கடிகளும்

95. காயங்கள் என்பவை யாவை?

தோலிலோ தோலுக்குக் கீழோ ஏற்படுபவை. தாக்குதல், வெட்டுதல், குத்துதல் முதலியவற்றால் ஏற்படுபவை. வேதிப்பொருள்கள், குளிர், வெப்பம் முதலியவற்றாலும் ஏற்படுபவை. இலேசான காயங்களாக இருந்தால் முதல் உதவி செய்தால் போதும். ஆழமான காயங்களாக இருந்தால் மருத்துவரையும் மருத்துவமனையையும் நாட வேண்டும்.

96. வெட்டுக் காயங்கள் என்பவை யாவை?

கத்தி, ஊசி, கூர்த்தகடு முதலியவற்றால் ஏற்படும் கீறல்கள். புரை எதிர்ப்பு மருந்து தடவினால் போதும். அயோடின் கரைசல்.

97. நைவு என்றால் என்ன?

நோய், காயம், புண் ஆகியவற்றால் திசுவில் ஏற்படும் மாற்றம்.

98. புண்கள் என்பவை யாவை?

தீ, வெப்பம் முதலியவற்றால் தோல் திசுக்கள் நைவுறுதல்.

99. இவற்றில் கவனிக்க வேண்டியவை யாவை?

நோய்த்தொற்றல், அதிர்ச்சி, ஊட்டக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புண் ஆழமாக இருந்தால் கட்டுப் போட வேண்டும்.

100. புண்களின் வகைகள் யாவை?

1. செம்புண்
2. கொப்புளங்கள்
3. தோல்நீங்குபுண்
4. தீய்புண். இதில் தசையும், எலும்பும் அழியும்.