பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88101. படுக்கைப்புண் என்றால் என்ன?

நோயின் காரணமாக நீண்டநாள் படுக்கையில் கிடப்பவருக்குப் பின் மண்டை, கணுக்கால், தோள் பட்டை, முழங்கை முதலிய இடங்களில் ஏற்படுவது. படுத்திருக்கும் பொழுது இந்த இடங்களில் அழுத்தம் அதிகம் ஏற்படுவதால் இப்புண் உண்டாகிறது.

102. கன்றிப்புகள் என்றால் என்ன?

ஊமைக் காயங்கள். தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள குருதி, வெளிப்படுவதால் தோலின் நிறம் மாறும்.

103. கொப்புளங்கள் என்றால் என்ன?

மயிர்களைக் சுற்றிக் கடுமையாக ஏற்படும் அழற்சி. ஸ்டேப்பிலோகாக்கஸ் அரியஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுவது. சீழ் உண்டாகும் வடிவத்திற்குத் திறப்பு

104. கடிகள் என்பவை யாவை?

நாய்க்கடி, பூச்சிக்கடி, பாம்புக்கடி முதலியவை. இக்கடியினால் ஏற்படும் நஞ்சு உடலைப் பாதிப்பது. உடன் உரிய மருத்துவம் செய்ய வேண்டும்.

105. வெறிநாய்க்கடி என்பது என்ன?

நச்சியத்தினால் உண்டாகும் கொடிய நோய். மூளையைத் தாக்குவது.

106. இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் யார்?

இதற்குப் பண்டுவம் கண்டறிந்தவர் லூயிபாஸ்டர். இது ஊசி முறைப் பண்டுவம். 14 ஊசிகள் தொப்புளைச் சுற்றிப் போடப்படும்.

6. நோய்க் கூறுகள்

107. கண்புரை என்றால் என்ன?

விழிவில்லை ஊடுருவும் திறனை இழத்தல். இதனால் குருட்டுத் தன்மை ஏற்படும் பொதுவான காரணம் மூப்பு.

108. மிகை விழியழுத்தம் என்றால் என்ன?