பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


கண்நோய், விழிக்கோளம் இறுகுதல், செரைன் துளிகள் பயன்படுத்தலாம்.

109. இல்லாள் பழுது முழங்கால் என்றால் என்ன?

முழங்காற்சில் வீக்கம். நிலையாகக் கடினப் பொருள்களில் மண்டியிடுவதால் ஏற்படுவது.

110. விளையாட்டாளர் இதயக்குறை என்றால் என்ன?

நெருக்கடியினால் தமனியின் திறமைக் குறை.

111. விளையாட்டாளர் கால் சொறி என்றால் என்ன?

ஒட்டுண்ணிப் பூஞ்சையினால் விரல்களுக்கிடையே ஏற்படும் தொற்று நோய்.

112. இலாட வடிவச் சிறு நீரகம் என்றால் என்ன?

பிறவி வடிவக் கோளாறுகளில் மிகக் கடுமையானது. இரு சிறு நீரகங்களும் தம் கீழ் முனைகளில் இணைக்கப்பட்டிருக்கும். சிறுநீர் தொற்றலே காரணம்.

113. நீர்க்கடுப்பு என்றால் என்ன?

சிறுநீர் கழிக்கும்பொழுது ஏற்படும் வலி.

114. சிறுநீரக நோய் மரபணு என்றால் என்ன?

பிகேடி - 1 என்னும் மரமணு சிறுநீரக நோய்க்குக் காரணமாகும். இந்நோயின் முழுப்பெயர் தற்புரி ஒங்கு பன்மக்கட்டிக் சிறுநீரக நோய் (ADPKD - auto somai dominant polycystic kidney disease)

115. இது எவ்வாறு கண்டுப்பிடிக்கப்பட்டது?

9 ஆண்டு ஆராய்ச்சிக்குப்பின் (பிரிட்டன், ஆலந்து) இது கண்டுபிடிக்கப்பட்டது. நிறப்புரி 16 என்னும் புரியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. (1994)

116. கழலை என்றால் என்ன?

தைராக்சின் சுரப்பில் அயோடின் ஊட்டம் குறைகின்ற பொழுது ஏற்படும் குறைநோய். தொண்டைச் சுரப்பி பருப்பதால் கழுத்து முன்பகுதியில் கரளை உண்டாகும்.

117. உதட்டுப் பிளவு என்றால் என்ன?

மேல் உதட்டில் ஏற்படும் பிறவிப் பிளவு.

118. அக்கி என்றால் என்ன?

நச்சியத்தினால் ஏற்படும் தோல் வெடிப்பு நோய்.