பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90



119. பிசிஜி என்றால் என்ன?

பேசிலி கால்மெட்டி குயரின். என்புருக்கி நோய்க்கு எதிராகச் செலுத்தப்படும் ஆனவன்.

120. பசியின்மை என்றால் என்ன?

உண்ண வேண்டும் என்னும் உணர்வு இல்லாத நிலை. உணவைக் கண்டாலே வெறுப்பு ஏற்படும்.

121. டாக்டர் வெர்மா என்பவர் யார்?

டாக்டர் இண்டர் எம். வெர்மா. அமெரிக்கச் சால்க் நிலையத்தைச் சார்ந்தவர். நச்சிய ஊடக மரபணுக்கள் மாற்றுகையைப் பயன்படுத்துவதில் முன்னோடி. இது மரபணுப் பண்டுவத்திற்கு ஓர் அணுகு முறையாகும். இவர் கருத்துப்படி மரபணுக்கள் நோய்வாய்ப்படுவதால் ஏற்படுவதே புற்றுநோய்.(1995)

122. முக்குளோரே-அசெட்டிகக் காடியின் பயன் யாது?

எரிகாரம். மருந்துகளைப் போக்கப் பயன்படுவது.

123. மரு என்பது யாது?

தோலிலி காணப்படும் சிறிய பொருக்குக் கட்டி.

124. திருகிய கழுத்து என்றால் என்ன?

தலை மடங்கி ஒரு பக்கம் அமைந்திருக்கும். பிறப்பின்பொழுது மார்பெலும்புக் காம்பு வடிவத் தசைகளில் ஒன்று சிதைவடைவதே இதற்குக் காரணம்.

125. மச்சம் என்றால் என்ன?

தோலில் ஏற்படும் நிறமுள்ள பகுதி. அடையாளக் குறி.

126. பரு என்றால் என்ன?

சிறு கட்டி வளர்ச்சி. முகத்திலும், கை, முதுகு முதலிய இடங்கிலும் ஏற்படுவது.

127. பேன் என்பது யாது?

பொதுவாகத் தலை மயிர்களுக்கிடையில் அண்டி வாழும் ஒட்டுண்ணி.

128. அழுகல் என்றால் என்ன?

குருதி வழங்கல் குறைவதால் திசு அதிக அளவு அழிவுறுதல்.

129. இதன் வகைகள் யாவை?