பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


ஒரு புதிய மூலக்கூறு. டாக்டர் ரைனி வைலர் தொகுத்தது. உடலில் குறிப்பிட்ட இடங்களுக்கு மருந்துகளை அனுப்ப உள்ளார்ந்த மதிப்புள்ளது. (1994)

13. மலமிளக்கி என்றால் என்ன?

மலம் மலக்குடலிலிருந்து எளிதாக வெளியேறச் செய்யும் மருந்து.

14. டேக்சால் என்பது என்ன?

ஓர் அரிய புற்று நோய் மருந்து. (1993)

15. அட்ராபைன் என்றால் என்ன?

கண்ணை விரியச் செய்யும் மருந்து.

15 மகளிர் நலம்

1. நம் உடலிலுள்ள நான்கு வகை அடிப்படைத் திசுக்கள் யாவை?

1. மேல் படலத்திசு
2. இணைப்புத்திசு
3. தசைத் திசு
4. நரம்புத் திசு

2. மெய்யுறுபுணர்ச்சி என்றால் என்ன?

உடலுறவு கொண்டும் இன்பம் நுகர்தல்.

3. புணர்வின்பம் என்றால் என்ன?

உடலுறவின் பொழுது ஆண் பெண் ஆகிய இருவருக்கு வரும் இன்ப உணர்ச்சி நிலை.

4. விந்தணு என்றால் என்ன?

விந்தணுவில் உள்ள ஆண் அணு. விரையில் விந்தணுக்கள் தோன்றுகின்றன.

5. கருமுட்டை என்றால் என்ன?

சூல் பையில் தோன்றும் பெண் அணு.

6. இனவளமின்மை ஆய்வு என்றால் என்ன?

விந்தில் விந்தணுக்கள் 60 மில்லியனுக்குக் கீழ் இருக்குமானால் இன வளமின்மை என்று பொருள். இயல்பான