பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


நிலை விந்தணுக்கள் 300 -500 மில்லியனுக்குக் கீழ் இருக்குமானால் இனவளம் உள்ள இயல்பான நிலை.

7. மலடு என்றால் என்ன?

மணமான ஆணோ பெண்ணோ பிள்ளை பெறும்தன்மை இல்லாதிருத்தல். குறையை மருத்துவ ஆய்வின் மூலம் அறியலாம். யாரோ ஒருவரிடம் குறை இருக்கலாம்.

8. கருவுறுதல் என்றால் என்ன?

ஆண் அணுவும் பெண் அணுவும் சேர்தலே கருவுறுதல்.

9. கருவுறுதல் எங்கு நடைபெறுகிறது?

கருப்பையில் நடைபெறுகிறது.

10. மசக்கை என்றால் என்ன?

கருவுற்ற பெண் 3 ஆம் மாதத்தில் துன்புறும் நிலை. காலையில் மட்டும் இருக்கும். ஆகவே, காலை நோய் என்று பெயர். வாந்தி அடிக்கடி இருக்கும்.

11. மனிதக் கருவளர் காலம் எத்தனை நாட்கள்?

266 நாட்கள்.

12. ஆண்மையின்மை என்றால் என்ன?

புணர்ச்சி இன்பங்கொள்ள விருப்பமின்மை அல்லது ஆற்றலின்மை.

13. புணர்வழித் தைப்பு என்றால் என்ன?

கிழிந்த புணர்வழியைச் சரி செய்ய நடைபெறும் அறுவை.

14. இதன் வகைகள் யாவை?

1. முன் புணர்வழித் தைப்பு
2. பின் புணர்வழித் தைப்பு

15. பெலோப்பியன் குழாய் என்றால் என்ன?

இத்தாலிய உடற் கூறியலார் சேப்ரியல் பெலோப்பியன் (1523-62) என்பவர் பெயரால் அமைந்தது. 7.5 செ.மீ. நீளமுள்ளது. சூல்பையிலிருந்து கருப்பைக்குள் செல்வது.

16. குழாய்த் துணுக்கம் யாருக்குச் செய்யப்படுகிறது?

கருத்தடை உண்டாக்கப் பெண்களிடம் செய்யப்படுகிறது. பெலோப்பியன் குழல் துண்டிக்கப்படும்.