பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


பெயர்க்கப் பெற்றுப் புரதமாக மாற்றப்படுதல். ரிபோசோம்களில் பகர்ப்பு நடைபெறுவது.

52. எஸ்டிஎம் என்பது என்ன? இதைக் கண்டுபிடித்தவர் யார்?

இதன் விரிவு Site-Directed Mutagenesis. இடவழிப்படு சடுதித் தோற்றம் என்பது இதன் பொருள். இந்நுணுக்கத்தைக் கண்டறிந்தவர் அமெரிக்க உயிர்த்தொழில் நுட்ப இயலார் மைக்கல் சிமித். இதற்காக 1993க்குரிய வேதித்துறை நோபல் பரிசின் ஒரு பகுதியை இவர் பெற்றார் இந்நுணுக்கத்தைக் கொண்டு புதுப்பண்புள்ள புரதங்களின் உண்டாக்கலாம். மரபாக்க வளர்ச்சிக்கு இது அச்சாணி போன்றது.

53. அலெக் ஜெப்ரேஸ் செய்த அருஞ்செயல் யாது?

1984இல் டிஎன்ஏ மாதிரிகளைக் கொண்டு விரல்பதிவு நுணுக்கத்தைக் கண்டுபிடித்தார்.

54. இந்தியாவில் டாக்டர் லால்ஜி சிங் செய்த அருஞ்செயல் யாது?

1988இல் டிஎன்ஏ விரல்பதிவைக் கண்டுபிடித்தார். இதற்கு இவர் அனைத்து டிஎன்ஏ துருவியை அமைத்துள்ளார்.

55. டிஎன்ஏ விரல்பதிவின் பயன்கள் யாவை?

1. உரிய பெற்றோர் யார் என்று கண்டுபிடிக்கலாம்.
2. திருடர்களையும் கொள்ளையர்களையும் கண்டுபிடிக்கலாம்.
3. திசுவகைகளை உறுதிசெய்யலாம்.
4. குறிப்பிட்ட பூச்சி இனத்தை உறுதிசெய்யலாம்.

56. பிறக்கப்போவது ஆணா பெண்ணா என்பது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?

B பிரிவு குருதியணுக்கள் குறைவாகவும் C பிரிவு குருதியணுக்கள் அதிகமாகவும் இருந்தால் பிறப்பது ஆண் என்பது உறுதி. இதையே தற்காலத்தில் அலகிடும் ஆய்வுகளும் செய்கின்றன.

57. ஆண்குழந்தையும் பெண் குழந்தையும் பிறப்பது எவ்வாறு?

மனித நிறப்புரிகள் 23 இணைகள்.
ஆணில் ஓர் இணையில் மட்டும் xy என்னும் நிறப்புரிகள்