பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
104

இருக்கும். பெண்ணில் இந்த வேறுபாடு இல்லை. எல்லாம் xx தான். ஆணிலுள்ள X பெண்ணிலுள்ள X ஆகிய இரண்டும் சேருமானால் பிறப்பது பெண். ஆணிலுள்ள Y பெண்ணிலுள்ள X ஆகிய இரண்டும் சேருமானால் பிறப்பது ஆண்.

XX - பெண்
XY - ஆண்.

58. ஒரே சமயம் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகள் எவ்வாறு பிறக்கின்றன?

ஒரு விந்தணு ஒரு கருமுட்டையோடு சேரும்பொழுது உண்டாவது கருவணு. இதிலிருந்து பிறப்பது ஒரு குழந்தை. புணர்ச்சிகளின் பொழுது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண் அணு, ஒன்றிற்கு மேற்பட்ட கருமுட்டையோடு சேரும் பொழுது பிறப்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும். இது நாய், பன்றி முதலிய விலங்குகளில் வழக்கமாக அதிகம்.

59. தண்டுக் கண்ணறைகள் (stem cells) என்றால் என்ன?

நம் உடலில் திசுக்களில் காணப்படுபவை.இவை முதிர்ச்சி யடையாக் கால்வழிக் கண்ணறைகளாகும். திசுக்களை யும் உறுப்புகளையும் உண்டாக்கும் கண்ணறைகளை உற்பத்தி செய்பவை.

60. இந்த ஆராய்ச்சியின் மருத்துவச் சிறப்பென்ன?

அறுவைக்குப்பின் திசுக்களை எளிதில் குணப்படுத்த லாம். வெண்புற்றுள்ள நோயாளிகளுக்கு நலமுள்ள குருதியணுக்களை வழங்கலாம். திசுக்களை மாற்றிப் பொருத்தலாம். (கண்)

61. பால் மாற்றம் என்றால் என்ன?

இது அலி மாற்றமாகும். ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறுவதற்குரிய பண்புகள் தோன்றுதல்.

62. அலிப்பண்பு என்றால் என்ன?

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட பண்பு.