உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
105

63. ஈட்டுபண்பு என்றால் என்ன?

தன் உடல் கண்ணறைகளில் சூழ்நிலை விளைவினால் ஒர் உயிர் பெறும் பண்பு. இதற்கு மரபு வழி உண்டு என்பது இலெமார்க் கொள்கையாகும்.

64. கால்வழிப்பண்பு என்றால் என்ன?

மரபணுக்கள் மூலம் வரும் உடற்பண்புகள். எ-டு சுருட்டை மயிர், சிகப்பு, கறுப்பு.


12. சூழ்நிலை இயல்

1. சூழ்நிலை என்றால் என்ன?

ஒரு தொகுதியைச் சூழ்ந்துள்ள சுற்றச் சார்பு

2. சூழ்நிலை இயல் என்றால் என்ன?

உயிர்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆராயும் உயிரியல் துறை.

3. சூழ்நிலையின் இரு பிரிவுகள் யாவை?

1. தனிச்சூழ்நிலை இயல் - தனி உயிர்கள் பற்றியது.
2. தொகுசூழ்நிலை - தொகுதி உயிர்கள் பற்றியது.

4. தகைவு என்றால் என்ன?

உயிரிகள் தம் சூழ்நிலைக்கேற்பச் செயற்படும் நிலை. இது உறுப்பு, நிறம் முதலியவற்றில் இருக்கும். விலங்குகள் தங்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள இது பயன்படுகிறது.

5. தகைவின் பல வகைகள் யாவை?

1. பாதுகாப்புநிறம் - வெட்டுக்கிளி
2. தாக்குநிறம் - பச்சைப்பர்பு
3. எச்சரிக்கை நிறம் - விரியன் நல்லபாம்பு.
4. நிறமாற்றம் - பச்சோந்தி

6. தகைவுப் போலி என்றால் என்ன?

உறுப்பு, ஒலி முதலியவற்றில் தீங்குள்ள விலங்குகள் தீங்கற்ற விலங்குகளை ஒத்திருத்தல். ஒலைப்பாம்பு நிறத்தில் விரியனை ஒத்திருத்தல்; சாரைப்பாம்பு