இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிறுத்தும் நடத்தை காட்டாக, வலுவுள்ள நாயிடம் வலு வில்லாத நாய் நயந்தும் குழைந்தும் வாலை ஆட்டுதல்.
16. வலுத்தாக்கல் என்றால் என்ன?
- ஒருவகை விலங்குநடத்தை. பிறவிலங்குகளை அச்சுறுத்த வும் எதிர்க்கவும் நடைபெறுவது. இது எதிர்ப்புக்குரிய துலங்கலே, எ-டு. புலி, சிங்கம்.
17. ஆழிட வாழ்விகள் என்றால் என்ன?
- ஏரி அல்லது கடலடியில் வாழும் தாவரத்தொகுதிகளும் விலங்குத் தொகுதிகளும் ஆகும். எ-டு இயக்கமற்ற விலங்குகள் தவழ்ந்தும் வளைதோண்டியும் வாழ்பவை.
18. வேலை ஒப்புமை என்றால் என்ன?
- உயிர்கள் தாம் செய்யும் வேலையில் ஒற்றுமை கொண்டதாக இருத்தல். எ-டு பறவைச் சிறகுகளும் பூச்சி இறகுகளும். இவ்விரண்டிற்கும் ஒற்றுமை பறத்தலில் மட்டும்; தோற்றத்தில் இல்லை.
19. வேலை ஒப்புமை உறுப்புகள் என்றால் என்ன?
- வேலையில் உறுப்புகள் ஒத்திருத்தல்.எ-டு. பறவைச் சிறகுகளும் பூச்சி சிறகுகளும்.
20. பகற்சுறுசுறுப்பு என்றால் என்ன?
- பகற்பொழுதில் செயலாக்கம் மிகுதியாக இருத்தல். எ-டு. தேனிக்கள்.
21. உயிரியல் கடிகாரம் என்றால் என்ன?
- பல பருவச் சுழற்சிகளையும் பகற்செயல் ஒழுங்குகளையும் ஒரே சீராக்கும் உயிரியல் உள்விசை நுட்பம்.
22. பகற்பொழுது ஒழுங்கு என்றால் என்ன?
- பகற்பொழுது தாளமுறை தாவரங்களிலும் விலங்குகளிலு முள்ள பல வளர்சிதை மாற்றச் செயல்களான பகற்கால ஒழுங்கு மனிதன் 40 பகற்கால ஒழுங்குகளைக் கொண்டவன்.
23. பருவ இடப்பெயர்ச்சி என்றால் என்ன?
- பருவத்திற்கேற்ப விலங்குகள் ஒரிடத்திலிருந்து மற்றோ ரிடத்திற்குச் செல்லுதல், வலசைபோதல் என்றுங் கூறலாம்.