இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. உயிரியல் என்றால் என்ன?
- உயிரிகளை ஆராயும் ஒர் அடிப்படை அறிவியல். தாவரவியல், விலங்கியல், உடலியல் ஆகிய மூன்றும் இதில் அடங்கும்.
2. உயிரி அளவியல் என்றால் என்ன?
- உயிரியல் உற்று நோக்கல்ளையும் நிகழ்ச்சிகளையும் புள்ளிவிவர முறையில் பகுப்பது.
3. உயிரி தகவலியல் என்றால் என்ன?
- உயிர்கள் பற்றிப் பல தகவல்களை அளிக்கும் துறை.
4. உயிர் அறிவியல் என்றால் என்ன?
- உயிர்களைப் பற்றி ஆராயுந்துறை. இதில் உயிரியல், மருத் துவம், விலங்கியல், தாவரவியல் முதலியவை அடங்கும்.
5. உயிரியல் பொறியியல் என்றால் என்ன?
- குறையுள்ள அல்லது நீக்கப்பட்ட உடல் உறுப்புகளை ஈடுசெய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்கப்படும் கருவிகளை ஆராயுந்துறை. எ-டு செயற்கை உறுப்புகள், கேட்க உதவுங்கருவிகள்.
6. உயிரியல் மின்னணுவியல் என்றால் என்ன?
- மின்னணுக் கருவிகளை உடலில் பதிய வைத்து மக்கள் நல்வாழ்வுக்கு உதவுவதை ஆராயுந்துறை.
7. நடத்தை இயல் என்றால் என்ன?
- விலங்கு நடத்தை சூழ்நிலைத் தகைவு முதலியவற்றை ஆராயுந்துறை.
8. நல்லியல் என்றால் என்ன?
- மாந்தரின் மரபுப் பண்புகளை மேம்படுத்துவதை ஆராயுந்துறை.