இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- தொல்லூழியின் தொடக்கப் புவி வளரியல் காலம். 570 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 100 மில்லியன் ஆண்டுக்காலம்வரை நிலவியது. இக்காலத்தில் வாழ்ந்த தொல்லுயிர்ப் படிவங்கள், கடல் உயிர்களாலானவை.
39. டிவோனியன் ஊழி என்றால் என்ன?
- தொல்லுயிர் சார்ந்த புவிவளரியல் காலம்.395 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்காலப் பாறைகளில் மாசிகள், மீன்கள் ஆகியவற்றின் புதைபடிவங்கள் புதைந்துள்ளன.
13. விலங்குகளின் தொழில்நுட்பவியல்
1. படியாக்கம் என்றால் என்ன?
- ஓர் உயிரின் நகலை டிஎன்ஏ வழி கருப்பையிள் வளர்த்து உண்டாக்கல். எ-டு டோலி செம்மறியாடு.
2. சார்லஸ் வெயிஸ்மன் செய்த அரும் பணி யாது?
- குச்சி வடிவ உயிரியல் மனித இண்டர் பெரானை வெற்றி தரும் வகையில் 1980 இல் உருவாக்கிக் காட்டினார்.
3. ஸ்டீன் வில்லாட்சன் செய்த அருந்செயல் யாது?
- 1984 இல் வெற்றிதரும் வகையில் செம்மறியாட்டைப் படியாக்கம் செய்தார்.
4. முதன் முதலில் படியாக்கம் செய்யப்பட்ட விலங்கு யாது?
- டோலி என்னும் செம்மறியாடு. 1997 இல் படியாக்கம் செய்யப்பட்டது.
5. இதைச் செய்தவர் யார்?
- பேரா. அயன் வில்மட் எடின் பர்க்கிற்கு அருகிலுள்ள ரோக்லின் நிறுவனத்தைச் சார்ந்தவர்.
6. முதன் முதலில் படியாக்கம் செய்யப்பட்ட வீட்டுப் பூனைக் குட்டி எது?
- ஆமை ஒட்டுப்பூனைக்குட்டி ஆகும். இது 2002 ஜனவரி யில் உருவாக்கப்பட்டது.
7. இதுவரை படியாக்கம் செய்யப்பட்டுள்ள விலங்கினங்கள்