இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
112
தம்பதியர்கள் ஆயத்தமாக உள்ளனர். இந்த ஆய்வில் 200 இனவளமற்ற தம்பதியர்களை இவர் பயன்படுத்துவார். (2001)
16. மனிதப்படியாக்கம் செம்மறியாட்டுப் படியாக்கம் இவ்விரண்டில் எது செய்வதற்கு எளிது?
- மனிதப்படியாக்கம்.
17. மனிதப்படியாக்கம் ஒழுக்கச் சிக்கலை உருவாக்குமா?
- முழு மருத்துவப் பயனோடு நின்றால் ஒழுக்கச் சிக்கலை உருவாக்குவதற்கில்லை.
18. மரபணுபாக்கம் அல்லது மரபாக்கம் என்றால் என்ன?
- இது 1977 வாக்கில் தோன்றிய புதிய அறிவியல் துறை. இது ஒரு தொழில் நுணுக்கமும் ஆகும்.
19. இந்நுட்பத்தில் அடங்கும் செயல்கள் யாவை?
- தேவைப்படும் மரபணுக்களை அடையாளங் கண்டறிந்து பிரிப்பதும், பின் ஆய்வக வளர்ப்புக் கரைசல்களுக்கு அவற்றை மாற்றுவதும் இதில் நடைபெறும் செயல்கள். வேறு உயிரிகளுக்கு மாற்றப்படும் வரை அவை வளர்ப்புக் கரைசலிலேயே இருக்கும்.
20. மரபணுவாக்கத்தின் பெரும் பயன் என்ன?
- புற்றுநோய் முதலியவற்றைக் குணப்படுத்தவும் புதிய எதிர்ப்பு பொருள்களை உண்டாக்கவும் பயன்படுவது.
21. மரபணுவாக்கத்தின் அதிக அக்கறை காட்டும் அறிவியலார் யாவர்?
- ஆங்கில நாட்டு அறிவியலாரும், அமெரிக்க நாட்டு அறிவியலாரும் ஆகும்.
22. மரபணுவாக்கத்தின் வேறு பெயர் என்ன?
- மீன் சேர்ப்பு டி என் ஏ தொழில் நுணுக்கம்.
23. மரபணு நடுநிலை என்றால் என்ன?
- ஓர் உயிர்த் தொகுதியில் காணப்படும் நிலைமை. இதில் அடுத்தடுத்து வரும் தலைமுறைகள் குறிப்பிட்ட மரபணுக்களைப் பொறுத்த வரை, ஒரே மரபு முத்திரையை ஒரே நிகழ்தகவுடன் கொண்டிருக்கும்.
24. மரபாக்கத்தில் உருவாக்கப்படும் இரு வளர்தூண்டிகள் யாவை?