பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


உயிரி படைக்கருவி ஆகும்.

32. உயிர் ஒழுக்க உடன்பாடு என்றால் என்ன?

இதை 20 ஐரோப்பிய நாடுகள் செய்துள்ளன. மரபாக்கத்தை மனிதன் மீது பயன்படுத்துவதைத் தடுப்பது இதன் முதன்மையான நோக்கம். (1997)


14. கால்நடை மருத்துவம்

1. கால்நடை அறிவியலின் புதுப் பெயர் என்ன?

விலங்கு அறிவியல்

2. முதன் முதலில் வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டது எது?

10,000 ஆண்டுகளுக்கு முன் நாய்தான் வீட்டுவிலங்காக வளர்க்கப்பட்டது.

3. அடுத்து வீட்டு விலங்காக வளர்க்கப்பட்டவை எவை?

கி.மு. 7,000 இல் ஆடுகள் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்பட்டன. இவற்றிற்குப் பின் குதிரைகள், மான்கள், ஒட்டகங்கள் முதலியவை வீட்டு விலங்குகளாக ஆயின.

4. குதிரை உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நாடு எது?

சீனா

5. சீனாவிற்கு அடுத்துக் கால்நடை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் எவை?

இந்தியா, அமெரிக்கா, பிரேசில், உருசியா, டென்மார்க் முதலியவை.

6. மரபுவழிப் பாடத்திட்டத்தில் விலங்கு அறிவியலின் நிலை என்ன?

கால்நடை உற்பத்தியின் தொழில்நுட்பத்தை ஆராய்தல். கால்நடை என்பது ஆடு, மாடு, குதிரை, பன்றி முதலியவை ஆகும்.

7. புரதத்தின் வகைகள் யாவை?

1. தாவரப்புரதம்
2. விலங்குப் புரதம்.

8. தாவரப்புரதம் உலக அளவில் எந்த அளவு கிடைக்கிறது?