இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9. பூச்சியியல் என்றால் என்ன?
- பூச்சிகளை ஆராயுந்துறை.
10. பூச்சிக் கவர்ச்சி என்றால் என்ன?
- பூச்சிகளினால் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறுதல்.
11. உயிர் மின்னியல் என்றால் என்ன?
- உயிரிகளில் நடைபெறும் மின்நிகழ்ச்சிகளை ஆராயுந்துறை
12. கண்ணறைவியல் என்றால் என்ன?
- உயிரணுக்களையும் அவற்றின் பகுதிகளையும் அமைப்பு நோக்கிலும் வேலைநோக்கிலும் ஆராயுந்துறை.
13. குளிர் உயிரியல் என்றால் என்ன?
- உயிர்களில் கடுங்குளிர் விளைவுகளை ஆராய்வது.
14. தொல்லுயிரியியல் என்றால் என்ன?
- புவிவளரியலின் ஒரு பிரிவு.அழிந்தொழிந்த உயிரிகள் அவற்றின் புதை படிவங்கள் ஆகியவற்றை ஆராயுந்துறை.
15. நுண் தொல்லுயிரி இயல் என்றால் என்ன?
- சிறப்புப் பெற்றுவரும் துறை. நுண்புதைபடிவங்களை ஆராய்வது. குறிப்பாகத் தொல்பொருள்களின் அகவையை உறுதிசெய்வதிலும் எண்ணெய்த் தேட்டத்திலும் பயன் படுவது.
16. மூலக்கூறு உயிரியல் என்றால் என்ன?
- உயிரியலில் சிறப்புள்ள மரபணுஅமைப்பை ஆராயுந்துறை.
17. உயிர்விசை இயல் என்றால் என்ன?
- உயிரை எந்திரமாகக் கொண்டு அதன் வேலைகளை ஆராயுந்துறை.
18. உயிர் மருத்தவப் பொறிஇயல் என்றால் என்ன?
- உயர்சார் மருத்துவத்தைப் பொறிஇயல் தொடர்பாக ஆராயுந்துறை.
19. புது இயல் என்றால் என்ன?
- புதுப் பொருள்களை ஆராயுந்துறை.
20. உயிரியல் தொலை அளவை என்றால் என்ன?
ஓரிடத்தில் பதிவு செய்யப்படும் இதயத்துடிப்பு, மூச்சுவிடுதல் முதலிய செயல்களை வானொலி மூலம் மற்றொரு இடத்திலிருந்து அளத்தல்.எடு. புவியிலிருந்து