பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரவுவது. இதன் அறிகுறிகள் அதிகக் காய்ச்சல், உடல் துளைகளிலிருந்து குருதிக் கசிவு. நச்சுயிரி, மேல்மூச்சு வழியாக உட்செல்வது. தலையிலும் கழுத்திலும் வீக்கம் உண்டாகும். இந்நோய் கண்ட விலங்குகள் இறப்பது உறுதி.

31. லெப்டோஸ்பைரா நோய் என்றால் என்ன?

கால்நடைக்கு லெப்டோஸ்பைரா என்னும் குச்சிவடிவ உயிரியினால் ஏற்படும் கொடிய தொற்றுநோய். துப்புரவற்ற நீர் மூலமும் உணவு மூலமும் பரவுவது. இதன் அறிகுறிகள் குருதிச் சோகை, கல்லீரலும் சிறுநீரகமும் சிதைதல், மஞ்சட்காமாலை, கருச்சிதைவு. இந்நோய் மனிதரிடத்து ஏற்படுமானால் தசைவலியும், காய்ச்சலும் விழி வெண்படல அழற்சியும் ஏற்படும்.

32. புருசெல்லா நோய் என்றால் என்ன?

உலக அளவில் கால்நடைகளிடம் காணப்படும் இனப்பெருக்க நோய். நச்சுயிரியால் ஏற்படுவது. அதன் பெயர் புருசெல்லா. ஆகவே இந்நோயும் புருசெல்லா என்று பெயர் பெறுகிறது. புருசெல்லா B பேரினத்தில் நான்கு சிறப்பினங்கள் உள்ளன. காற்று மூலம் பரவுவது. அடிக்கடி புணர்ச்சி வாயிலாகவும் பரவுவது. கால்நடைகளின் இது கருச்சிதைவை உண்டாக்கும். தங்கும் நஞ்சுக்கொடி, பெருகுவதில் கடினம், இன வளமின்மை ஆகியவை அறிகுறிகள்.

33. அஸ்பர்ஜில்லஸ் நோய் என்றால் என்ன?

அஸ்பர் ஜில்லஸ் என்னும் பூஞ்சையினால் கால்நடைக்கு ஏற்படும் நோய்.

34. ஒட்டுண்ணி நோய்களின் வகைகள் யாவை?

1. உள் ஒட்டுண்ணி நோய்கள் - நாடாப் புழு, வட்டப்புழு முதலியவற்றால் ஏற்படுவது.
2. புற ஒட்டுண்ணி நோய்கள் - உண்ணிகள், தெள்ளுப்-