பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


6. கண்ணறை வேதியியலை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆல்பிரட் கோசல் 1910 இல் நோபல் பரிசு பெற்றார்.

7. தடுப்பாற்றல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஜீல்ஸ் பார்டெட் 1919 இல் நோபல் பரிசு பெற்றார்.

8. தசையில் வெப்பம் உண்டாவதை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆர்க்கிபால்டுவிவியன் 1922இல் நோபல் பரிசு பெற்றார்.

9. இன்சுலின் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்ற இருவர் யார்?

சர் பேண்டிங், மாக்லியாடு ஆகிய இருவரும் 1923இல் பெற்றனர்.

10. பித்தநீர்க்காடியை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹெயின்ரிச் விலேண்ட் 1927இல் நோபல் பரிசு பெற்றார்.

11. வைட்டமின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

அடால்ப் ஆட்டோ ரெயின்சால் 1928இல் பெற்றார்.

12. நொதித்தல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் ஹார்டன் ஆர்தர் 1929இல் நோபல் பரிசு பெற்றார்.

13. வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சர் பிரடெரிக் கெனலாண்ட் ஹாப்கின்ஸ், சி.ஈ. எய்ஜக்மன் ஆகிய இருவரும் 1929இல் நோபல் பரிசு பெற்றனர்.

14. நரம்பு நோய் நீக்கும் வைட்டமின்களைக் கண்டுபிடித் ததற்காக (வைட்டமின் B தொகுதி) நோபல் பரிசுபெற்றவர் யார்?

கிறிஸ்டியன் எய்ஜக்மன் 1929இல் நோபல் பரிசுபெற்றார்.

15. நரம்பு முனைகளில் நீர்ச்செலுத்திகள் பற்றிக் கண்டறிந்த-