பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


நோபல் பரிசு பெற்றனர்.

52. நரம்பணுப் படலத் தூண்டல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

சர் ஜான் கேரியூ எக்லெஸ் 1963இல் நோபல் பரிசு பெற்றார்.

53. கண்ணறைப் படல ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஆலன் லாய்டு ஹாட்கின் 1963இல் நோபல் பரிசு பெற்றார்.

54. கொழுப்பு வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

பியோடர் லைனன், பிளாக் ஆகிய இருவரும் 1964இல் நோபல் பரிசுபெற்றனர்.

55. ஹரிகோவிந்து கொரோனா செய்த அரும்பணி யாது?

ஒரு செயற்கை மரபணுவை முதன்முதலில் உருவாக்கினார். இது நல்ல செயற்பாடு உடையது. இதற்காக இவர் 1968இல் நோபல் பரிசு பெற்றார். இவர் இந்திய அறிவியலார் என்பது குறிப்பிடத்தக்கது.

56. புரதத் தொகுப்பில் மரபுக்குறித் தொகுதியின் வேலை பற்றி ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

மார்ஷல் நிரன்பர்க், ஹாலி, கொரேனா ஆகிய மூவரும் 1968இல் நோபல் பரிசு பெற்றனர்.

57. மரபணுவியல் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?

சால்வேடார் லூரியா, டெல்பிரக், ஹெர்ஷே ஆகிய மூவரும் 1969இல் நோபல் பரிசு பெற்றனர்.

58. வளர்தூண்டிகளின் பொறிநுட்ப ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஏர்ல் சதர்லேண்டு 1971இல் நோபல் பரிசுபெற்றார்.

59. ரிபோ உட்கரு மூலக்கூறின் வினையூக்கம், வேதியமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்ததற்காக, நோபல் பரிசு பெற்றவர் யார்?

வில்லியம் ஸ்டெயின் 1972இல் நோபல் பரிசு பெற்றார்.

60. எதிர்ப்புப் பொருள்களின் வேதியமைப்பை ஆராய்ந்த