இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
127
- வாலர்டர் கில்பர்ட் 1980இல் நோபல் பரிசு பெற்றார்.
70. பெருமூளை அரைக்கோள ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
- ரோஜர் ஸ்பெரி, ஹியூபல், டார்ஸ் ஆகிய மூவரும் 1981இல் நோபல் பரிசு பெற்றனர்.
71. வினையாற்றலுள்ள உயிரியல் பொருள்களைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
- சர் ஜான் வேன் 1982இல் நோபல் பரிசு பெற்றார்.
72. வளர்ச்சிக் காரணிகள் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர் யார்?
- ஸ்டேன்லி கோகன் 1986இல் நோபல் பரிசுபெற்றார்.
73. நச்சுயிரித் தன்மையுள்ள கட்டிகளை ஆராய்ந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
- ஹேரோல்டு லார்மஸ், பிஷன் ஆகிய இருவரும் 1989இல் நோபல் பரிசு பெற்றனர்.
74. உயிரணுக்களின் தனி அயனி வழி வேலைக் கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
- எர்வின் நெதர், சாக்மன் ஆகிய இருவரும் 1991இல் நோபல் பரிசுபெற்றனர்.
75. கண்ணறை வளர்சிதை மாற்ற ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றவர்கள் யார்?
- பிஷர், கிரப்ஸ் ஆகிய இருவரும் 1992இல் நோபல் பரிசு பெற்றனர்.
76. பாலிமரேஸ் தொடர்வினைக்காக நோபல் பரிசு பெற்றவர் யார் ?
- கேரி மில்லிஸ் 1993இல் நோபல் பரிசுபெற்றார்.
77. பிளவு மரபணுக்களைத் தனித்தனியாகக் கண்டறிந்தவர்கள் யார்? இவர்களுக்கு இதற்காக எப்பொழுது நோபல் பரிசு கிடைத்தது?
- பிலிப் ஷார்ப், இராபர்ட்ஸ் ஆகிய இருவரும் 1977இல் கண்டறிந்தவர். இதற்காக 1993இல் 16 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசு பெற்றனர்.