இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. விலங்கு என்றால் என்ன?
- பிற உயிர்களை உணவாகக் கொள்ளும் இடம் பெயர் இயக்கமுள்ள உயிர்.
2. விலங்குகளின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. கடற்பஞ்சு தவிர ஏனையவை இடம் பெயர்பவை.
- 2. கண்ணறை, கண்ணறைப்படலத்தாலானது.
- 3. பச்சையம் இல்லாததால் தங்கள் உணவைத் தாங்களே உண்டாக்க இயலாது.
- 4. வளர்ச்சி வரம்புள்ளது
3. விலங்கியலின் பிரிவுகள் யாவை?
1. உருவியல் | - | புறந்தோற்ற இயல். |
2. திகவியல் | - | திசுக்களை அதாவது உள்ளமைப்பை ஆராய்வது. |
3. உடலியல் | - | உடலின் உறுப்பு அதன் செயல்கள் ஆகியவற்றை ஆராய்வது. |
4. வகைப்பட்டியல் | - | விலங்குகளை வகைப்படுத்தல் |
5. சூழ்நிலை இயல் | - | தாவரங்களுக்கும் சூழ்நிலைகளுக்குமுள்ளதொடர்பை ஆராயுந்துறை. |
6. விலங்குப் புவி இயல் | - | விலங்குப் பரவலை ஆராயுந்துறை. |
7. தொல் விலங்கியல் | - | தொல்கால விலங்குகளை ஆராய்வது. |
8. பயனில் உறுப்பியல் | - | குடல் வால் முதலிய பயனில்லாத உறுப்புகளை ஆராயுந்துறை. |
4. உடலியலின் வகைகள் யாவை?
- 1. மனித உடலியல் 2. விலங்கு உடலியல் 3.தாவர உடலியல்.
5. உடல் மின்னியல் என்றால் என்ன?
- மின் நிகழ்ச்சிகளுக்கேற்றவாறு உயிரிகள் எவ்வாறு வியைாற்றுகின்றன என்பதை ஆராயுந்துறை.
6. உடல் என்றால் என்ன?
- விலங்குடல், தாவர உடல், மனித உடல் என இது மூன்று வகை. இவற்றில் மனித உடலிலேயே திட்டமான உறுப்புகள் உண்டு.