இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நன்னீரில் வாழும் காலணி வடிவ உயிர். வெளிப் புறக்குற்றிழைகள் இதற்கு இயக்கத்திற்கு உதவுகின்றன. இதில் பெருஉட்கரு சிறுஉட்கரு என இரு கருக்கள் உண்டு. இவ்விரண்டில் முன்னது உறுப்பு வேலைகளையும் பின்னது இனப்பெருக்கக் வேலைகளையும் கட்டுப் படுத்துவது.
3. நுண் விலங்கு என்றால் என்ன?
- கண்ணுக்குத்தெரியாத உயிரி. எ.டு அமீபா.
4. உணவுக் குமிழ் என்றால் என்ன?
- அமீபா, பரமேசியம் முதலிய ஓரணு உயிரிகளில் காணப்படும் கண்ணறையின் செரித்தல் பகுதி.
5. போலிக்கால் என்றால் என்ன?
- அமீபா முதலிய உயிரிகள் தங்கள் உணவைப் பற்ற அல்லது நகரத் தற்காலிகமாக உண்டாக்கும் முதல் கால் நீட்சிகள்.
6. கடல் மிதவை வாழ் உயிரிகள் என்பவை யாவை?
- மேற்பரப்பு நீர்கள் அல்லது கடலின் நடுஆழப்பகுதியில் வாழும். இவை மிதப்பிகள் நீந்திகள் என இருவகை. எ-டு. நுண்ணுயிர்த் தாவரங்கள், நுண்ணுயிர் விலங்குகள்.
7. துளை உடலிகள் என்பவை யாவை?
- இவை மட்டுமே இடம் பெயரா நீர் வாழ் விலங்குகள். ஒற்றை உடற்குழியில் பல துளைகள் உண்டு.
8. உப்பு நீரிலேயே கடற்பஞ்சுகள் காணப்படும் அய்டிரா என்பது யாது?
- மெல்லுடலைக் கொண்டகுழி உடலிவகுப்பைச் சேர்ந்தது. உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இருபாலி.
9. நீராம்பு என்றால் என்ன?
- அய்டிரா வாழும் தொகுதியிலுள்ள ஊட்டமிக்க குழாய் உடலி.
10. உணர்விரல் என்றால் என்ன?
- மென்மையானதும் மெலிந்ததுமான நெகிழ்ச்சியுள்ள உறுப்பு. உணரவும் பற்றிப் பிடிக்கவும் பயன்படுவது. எ-டு. அய்டிரா