இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. மணிஉடலி என்றால் என்ன?
- குழி உடலிகளின் வாழ்க்கைச் சுற்றின் ஒரு நிலை. உடல் மணி வடிவில் இருக்கும் உயிர்.
12. இழுது மீன் என்றால் என்ன?
- கடல்வாழ் குழிக்குடலி. பனை நொங்கு போன்ற உடல் திண்மை. உணர்விரல்களில் கொட்டனுக்கள் உண்டு. குடை வடிவ உடல்.
13. அய்டிரோசோவா என்றால் என்ன?
- குழிஉடலி வகுப்பபைச் சார்ந்தது. எ-டு பவழங்கள், இழுது மீன். சிறப்புத் தலைமுறை மாற்றம் நிகழ்தல். கலவியிலாச் சிற்றுயிரி நீரம்பு நிலையும் கலவியுள்ள பாலாம்பு நிலையும் மாறிமாறி உண்டாதல்.
14. பவழ உயிரிகள் என்பவை யாவை?
- குழிக்குடலி வகுப்பைச் சார்ந்தவை. பவழப்பாறைகளை உண்டாக்குபவை. பசிபிக் பெருங்கடலிலும் மையத் தரைக்கடலிலும் காணப்படுபவை.
15. பவழத் தீவு என்றால் என்ன?
- வட்டவடிவப் பவழ மலைத் தொடர் மைய உப்பங் கழியைச் சார்ந்தது.
16. இழைப்புழுக்கள் என்பவை யாவை?
- உடல் துண்டங்கள் இல்லா விலங்குகளின் பிரிவு உருளை வடிவ உடல். மூச்சுறுப்புகள் இல்லை. குருதிக்குழாய் மண்டலமும் இல்லை. எ-டு. நாக்குப் பூச்சி.
17. நாக்குப்பூச்சி என்றால் என்ன?
- குடலில் வாழும் ஒட்டுண்ணி.
18. முட்தோலிகள் என்றால் என்ன?
- ஆரச்சமசீருள்ள விலங்குகள். உடல் சுவரில் சுண்ண ஊட்டமுள்ள தட்டுகள் வலுவூட்ட இருக்கும். குழாய்க ளால் இயக்கம் நடைபெறும். எ-டு நட்சத்திர மீன், கடல் அல்லி
18. வாயினின்று விலகியது என்பது எதைக் குறிக்கும்?
நட்சத்திர மீனில் வாய் அமைந்துள்ள பக்கத்திற்கு நேர் எதிர்புறம் இருக்கும் நிலை. திட்டமான மேல்புறம்,