இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24
29. இறால் என்பது யாது?
- சிறிய நண்டுவகை விலங்கு. கடலில் வாழ்வது உண்ணக்கூடியது.
30. இறால் வளர்ப்பு என்றால் என்ன?
- உணவுச் சிறப்புக்கருதி இறால்கள் நன்னீர் வயல்களில் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு ஹெக்டேர் நிலத்திலும் 500-2000 கிகி இறால் கிடைக்கிறது. ஜப்பானில் ஒரு ஹெக்டேருக்கு 6000 கிகி இறால் கிடைக்கிறது.
31. ஆளி என்பது யாது?
- இருதிறப்பு ஓட்டு மெல்லுடலி. இதில் முத்து உண்டாகிறது.
32. எண்காலி என்றால் என்ன?
- எட்டுக்கால்களைக் கொண்ட மெல்லுடலி. கைநீட்சிகளின் உட்பரப்பில் ஒட்டுறிஞ்சிகள் உண்டு. எ-டு அக்டோபஸ்.
33. கனுக்காலிகள் என்றால் என்ன?
- விலங்குலகின் பெருந்தொகுதி, கரப்பான்.
34. கணுக்காலிகளின் சிறப்பியல்புகள் யாவை?
- 1. புற எலும்புக் கூடு உண்டு.
- 2. கால்கள் கணுக்களில் இணைக்கப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு கண்டத்திலும் இருக்கும்.
- 3. உடற்குழி சிறியது.
- 4. நக உயிரிகளில் மட்டுமே குற்றிழைகள் உண்டு.
35. கணுக்காலிகளின் வகுப்புகள் யாவை?
1. நகத்தாங்கிகள் | - | கரப்பான் |
2. தோட்டுயிரிகள் | - | நண்டு |
3. பலகாலிகள் | - | பூரான் |
4. சிலந்தியங்கள் | - | சிலந்தி |
36. பூச்சி என்பது யாது?
- இது கணுக்காலி. தலை, மார்பு, வயிறு என உடல் பிரிந்திருக்கும். எ-டு கரப்பான்.
37. பூச்சிக்கொல்லி என்றால் என்ன?
- பூச்சிகளைக் கொல்லும் வேதிப்பொருள்
38. பூச்சியுண்ணி என்றால் என்ன?
- பூச்சி உண்ணும் விலங்கு, பல்லி.