உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

39. தேனீத்தாண்டவம் என்றால் என்ன?

உணவு ஊற்றுவாயின் திசையையும் தொலைவையும் காட்ட வேலைக்காரத் தேனிக்கள் நடத்தும் இயக்கக் கோலம்.

40. தேன் என்பது என்ன?

பூக்களின் தேன் சுரப்பியிலிருந்து பெறப்படும் நீர்மத்தைப் பூச்சிகள் பாகுநிலையில் இனிப்பாக்குதல். இது கெடாது நீண்ட நாள் இருக்கும். பாதுகாப்புப் பொருள்.

41. தேன் பருந்து என்றால் என்ன?

தேனிக்களையும் குளவிகளையும் தின்னும் பருந்து.

41. தேன் மெழுகின் பயன்கள் யாவை?

பல சேர்மங்கள் சேர்ந்த மஞ்சள் நிறப்பொருள். தன் கூட்டைக் கட்டத் தேனியால் சுரக்கப்படுவது. மெழுகுப் பொருள்கள், மருந்துகள், ஒப்பனைப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது.

43.தேனீ நச்சின் இயல்பு யாது?

தேனிக்கள் கொட்டும்பொழுது, உட்செலுத்தப்படும் நச்சு. குறைந்த அளவு மூலக்கூறு மதிப்புள்ள புரதமும் இஸ்டமைனும் உண்டாக்கும் நொதிகளும் இதில் முதன்மையாக இருக்கும்

44. எறும்புகள் என்பவை யாவை?

சமூகப் பூச்சிகள். சிறகற்றவை, சுறுசுறுப்பானவை. உணரிகள் உண்டு. வீட்டுத் தொற்றுயிரிகள்.

45. எறும்பால் பரவல் என்றால் என்ன?

விதைகள் முதலியவை எறும்புகளினால் பரவல். எ-டு. கேஃவிபோரஸ் வகை விதைகள்.

46. அரக்கு என்பது யாது?

பெண் அரக்குப்பூச்சி உண்டாக்கும் பிசின். இது இசைத்தட்டுகள் செய்யவும் நகை வெற்றிடங்களை நிரப்பவும் பயன்படுகிறது.

47. பெராமோன் என்றால் என்ன?

செய்தித் தொடர்பிற்காகப் பூச்சிகள் சுரக்கும் வேதிப்பொருள்.