உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

48. நிலைநிறுத்திகள் என்பவை யாவை?

குறுகிய கரணை வடிவமுள்ள உண்மை ஈக்களின் பின் இறக்கைகள் பறக்கும் பொழுது அதிர்ந்து, நிலை நிறுத்திகளாகச் (சமனாக்கிகளாக) வேலை செய்பவை.

49. வண்ணத்துப்பூச்சி என்றால் என்ன?

இறக்கைகளும் செதில்களும் உள்ள பூச்சி. இறக்கைகளாலும் செதில்களாலும் உடல் மூடப்படுவது. தொகுப்புணரிகள் இருப்பதால் அத்துப்பூச்சியிலிருந்து வேறுபடுவது. குழல்வாய் தேன் உறிஞ்சும் சிறப்புறுப்பு.

50. போலிப்புணர்ச்சி என்றால் என்ன?

தன் நிறமொத்த பூவைப் பூச்சி என எண்ணி, அதனை ஆண்பூச்சி புணரமுயலுதல். விளைவு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுதல். நிறமட்டுமல்லாமல் வடிவமும் மணமும் புணருவதற்குக் காரணம்.

51. குழல் வாய் என்றால் என்ன?

உறிஞ்சுகுழல் எ.டு வண்ணத்துப்பூச்சி.

52. இனப்பிரிவு என்றால் என்ன?

தேனி, எறும்பு முதலிய சமூகப்பூச்சிகளில் காணப்படும் பிரிவு. எ-டு. அரிசி, வேலையாட்கள், ஆண்கள்.

53. மரவட்டை என்றால் என்ன?

பயிருண்ணி. காற்றுக் குழாய்மூலம் மூச்சுவிடுவது. உருளை வடிவ உடல் முதல் மூன்று வட்டுக்களைத் தவிர ஏனைய ஒவ்வொன்றும் ஈரிணை ஊரும் கால்களைக் கொண்டவை.

54. பற்றிகள் என்றால் என்ன?

சில ஆண் பூச்சிகளின் வயிற்றின் பின் முனையில் காணப்படும் ஒரினை இணையுறுப்புகள். கலவியின் பொழுது பெண்பூச்சியைப் பற்றப் பயன்படுபவை.

55. உள்ளுறை வளர்ச்சி என்றர் என்ன?

சில ஈக்களில் முட்டை பொறிந்ததும் இளம் உயிரிகள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறும். முதிர்ச்சியடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப் புழுவாகும்.

56. கொசுக்கள் என்பவை யாவை?