பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

நோய் பரப்பும் உயிரிகள். குயூலக்ஸ் பேட்டிகன்ஸ் யானைக் காலையும் அனோபிலிஸ் மலேரியாவையும் பரப்புபவை.

57. அனோபிலிஸ் கொசு என்றால் என்ன?

மலேரியா நோயைப்பரப்புவது.

58. இதைக் கண்டறிந்தவர் யார்?

சர் ரெனால்டு ராஸ்.

58. மின்மினி ஒளிர்வது எவ்வாறு?

இதன் வயிற்றுத் துண்டங்களில் ஒளி உறுப்புகள் உள்ளன. இங்கு லுசிபெரின் என்னும் வேதிப்பொருள் லுசிபெரஸ் என்னும் நொதியினால் ஆக்ஸிஜன் ஏற்றம் பெறுவதால், நிற ஒளிர்வு இரவில் உண்டாகிறது.

60. சிலந்தியங்கள் என்றால் என்ன?

கணுக்காலியின் ஒரு வகுப்பு. இதில் தேள், சிலந்தி முதலியவை அடங்கும்.

61. இவற்றின் சிறப்பியல்புகள் யாவை?

1. நிலத்தில் வாழ்பவை
2. உடல் மேற்பரப்பு அல்லது காற்றுக்குழல் மூலம் மூச்சு விடுபவை.
3. தலை, மார்பு, வயிறு என உடல் கண்டங்கள் பிரிந்திருக்கும்.
4. தலை - மார்பில் முதிர்ச்சி நிலையில் நான்கிணை கால்கள் இருக்கும்.

62. ஒட்டுறுப்பு என்றால் என்ன?

இணையுறுப்பாக உள்ள புறவுறுப்பு. இவ்வுறுப்பு கணுக்காலிகளில் உண்டு. இணை இணையாக இருப்பது. இணையின் ஒவ்வொரு பகுதியும் கணுக்களால் ஆகியிருக்கும். இக்கணு அமைப்பே கணுக்காலிகளுக்கு அப்பெயர் வழங்கக் காரணம்.

63. ஒட்டுறப்புகளில் மிகப்பெரியது எது?

யானையின் துதிக்கை.

64. உணரிகள் என்றால் என்ன?

தலையில் பொருந்தி இருக்கும் கணுக்காலிகளின் ஒட்டுறுப்புகள்.