உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
36

அணில்.

68. காயடித்தல் என்றால் என்ன?

பிறப்புறுப்புகளைக் குறிப்பாக விரையை நீக்குதல். இது பொதுவாகக் கால்நடைகளுக்குச் செய்யப்படுவது. எ-டு காளை மாடுகள்.

69. ஓரகப் பல்லமைவு என்றால் என்ன?

எல்லாப் பற்களும் ஒரே வகையாக உள்ள பல்லமைவு. எ-டு தவளை, பல்லி.

70. வேற்றகப் பல்லமைவு என்றால் என்ன?

பற்கள் வேறுபட்டு அமைந்திருத்தல். வெட்டுப்பல், கோரைப் பல், கடைவாய்ப்பல். எ-டு மனிதன்.

71. ஒரக உறுப்புகள் என்றால் என்ன?

தோற்ற ஒற்றுமை மட்டும் உள்ள உறுப்புகள். எ-டு. வெளவால் சிறகுகளும் மீன் துடுப்புகளும்.இவை தோற்ற ஒற்றுமை உடையவை. வேலையில் வேறுபட்டவை.

72. விலங்குகளிலேயே மிக உயரமானது எது

ஒட்டைச்சிவிங்கி, 7 மீட்டர் உயரம் உள்ளது.

73. மூன்றாம் இரைப்பை என்றால் என்ன?

அசைபோடும் விலங்குகளின் இரைப்பையின் மூன்றாம் பிரிவு.

74. திமிங்கிலத்தின் சிறப்பென்ன?

நீரிலுள்ள விலங்குகளில் மிகப்பெரியது, பாலூட்டி, கூரிய செவியுணர்வு மிக்கது. எதிரொலி மூலம் பொருள்களின் இருப்பிடத்தை அறிவது. மூச்சுவிட அடிக்கடி நீருக்கு மேல் வருவது. அதிகம் இது வேட்டையாடப்படுகிறது. இருப்பினும், இதனைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

75. யானையின் சிறப்பென்ன?

நில விலங்குகளில் மிகப் பெரியது, புல் பூண்டுகளை உண்ணுவது. இதன் தந்தங்கள் மதிப்புள்ளவை.

76. ஆப்பிரிக்க யானையைப் பழக்க முடியுமா?

முடியாது.

77. தும்பிக்கையான் என்பது யாது?