பக்கம்:அறிவியல் வினா விடை-விலங்கியல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


108. நகங்கள் என்பவை யாவை?

உயர் வகை முதுகு எலும்புகளின் விரல் நுனியில் காணப் படும் தட்டையான கடினத்தகடுகள். தேயத்தேய அல்லது நறுக்க நறுக்க வளரக்கூடியவை.

109. நீந்துயிர்கள் என்பவை யாவை?

ஏரி, கடல், பெருங்கடல் ஆகியவற்றில் வீறுடன் நீந்தும்

விலங்குகள். எ-டு மீன், சுறா, திமிங்கிலம்.

110. நாற்கால் விலங்குகள் யாவை?

மான், மாடு, தவளை, ஓணான் முதலியவை.

111. முத்துச்சாரம் என்றால் என்ன?

மீன்செதில்களிலிருந்து பெறப்படும் வெண்ணிறப்பற்கள். செயற்கை முத்துகள் செய்ய பயன்படுவது.

112. முத்து என்றால் என்ன?

முத்துச் சிப்பியினால் உண்டாக்கப்படும் பொருள்.

113. முத்து எவ்வாறு உண்டாகிறது?

சிப்பியின் கூட்டிற்குள் மூடகத்திற்கும் ஓட்டிற்கும் இடையில் மணல், துகள் முதலியவற்றில் ஏதாவது ஒன்று சேரும்பொழுது அதைச் சுற்றி மூடகம் ஓர் உறையை உண்டாக்கும். இதுவே பின் முத்துகளாக வளர்வது.


7. கண்ணறையும் திசுவும்

1. கண்ணறை (செல்) என்றால் என்ன?

உயிர்ப்பொருள் நிரம்பியதே கண்ணறை. இது உயிரின் அமைப்பலகும் வேலையலகும் ஆகும்.

2. கண்ணறையிலுள்ள உயிர்ப்பொருள்களுக்கு என்ன பெயர்?

முன் கணியம் (புரோட்டோபிளாசம்)

3. கண்ணறையில் கண்ணறைப் படலத்திற்கும் உட்கருவிற்கும் இடையிலுள்ள பகுதியின் பெயர் என்ன?

கண்ணறைக் கணியம் (சைட்டோபிளாசம்)

4. கண்ணறையின் இன்றியமையாப் பகுதி எது?