இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45
12. பிளவுறு கடைவாய்ப்பற்கள் என்றால் என்ன?
- யானை, குதிரை ஆகிய விலங்குகளில் கடைவாய்ப் பற்களில் குறுக்குவரிப் பிளவுகள் இருத்தல்.
13. கோரைப்பல்லின் சிறப்பு யாது?
- நாயிடத்துக் கோரைப்பல் நன்கு வளர்ந்துள்ளது. பாம்பிடத்து இது நச்சுப்பல். யானையினிடத்து தந்தம்.
14. குடல் வாய் என்பது யாது?
- குடலைநோக்கிய இரைப்பைத்திறப்பு, தசையாலான வளையம். இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுகிறது.
15. உணவு வழிக்கு வெளியே உள்ள சுரப்பிகள் யாவை?
- கல்லீரல், கணையம்.
16. முன் சிறுகுடல் என்றால் என்ன?
- குடலின் முன்பகுதி, உணவு இறுதியாகச் செரிப்பது.
17. முன் சிறுகுடலில் உணவு இறுதியாகச் செரிக்கப்படுவதற்குக் காரணமென்ன?
- கணையநீர், பித்தநீர், சிறுகுடல் நீர் ஆகிய மூவகைச் செரித்தல் நீர்கள் உள்ளன. தவிரச் செரித்த உணவு உறிஞ்சப்படுவதற்குக் குடற்பால் குழல்களும் உள்ளன.
18. உணவு முழு அளவுக்கு எங்குச் செரிக்கிறது?
- முன் சிறுகுடல் செரிக்கிறது. இங்கு மூவகைச் செரித்தல் நீர்கள் உள்ளன.
19. குடல்வால் என்றால் என்ன?
- பெருங்குடலில் குடல் பையின் கீழ் முனையிறுள்ள விரல் போன்ற உறுப்பு. இது பயனற்ற எச்ச உறுப்பு.
20. குடல் வால் அழற்சி என்றால் என்ன?
- குடல் வால் நோயுற்று வீங்குதல். அதிக வலி உண்டாகும் பொழுது இதை அறுத்து நீக்கதே நல்லது.
21. வயிறு என்பது யாது?
- நடுவுடலில் மார்புக்குக் கீழுள்ள அறை. இதில் இரைப்பை, குடல் முதலிய உறுப்புகள் இருக்கும்.
22. குடல் என்பது யாது?